full screen background image

படக் குழுவினர் விரதம் இருந்து தயாரித்த ‘சிந்தலக்கரை தாயே’ –  பக்தி படம்..!

படக் குழுவினர் விரதம் இருந்து தயாரித்த ‘சிந்தலக்கரை தாயே’ –  பக்தி படம்..!

வெட்காளியம்மன் மூவிஸ் தயாரித்துள்ள சமூக அக்கறை கலந்த பக்தி மயமான படம் ‘சிந்தலக்கரை தாயே’.

படத்தில் நாயகிகளாக அபிநிதி, ப்ரியா, சித்ரா மூவரும் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் நெல்லை சிவா, கோவை செந்தில், தவசி, மதுரை மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கணேஷ்ராஜா, இசை – ஏ.சி.சி.தினகரன், நடனம் – ஸ்டைல் பாலா. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி இதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கள்ளக்குறிச்சி எம்.பி.செல்வம்.

இந்தக் காலத்தில் பக்தி படமா..? எந்தத் தைரியத்தில் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர்..? என்ற கேள்விகளுக்கு பதிலளித்த இயக்குநர் செல்வம், “ஆன்மீகத்தை மையப்படுத்தி அது மந்திரமா.. தந்திரமா..? என்பதன் பின்னணியில் தமிழ்த் திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் உருவாகியிருக்கும் பக்தி படம் இது.

பல வருடங்களுக்கு முன்பு வெளியான ‘ஆதி பராசக்தி’ படம் போல தெய்வீக மணம் கமிழு பிரம்மாண்டமான செலவில் இந்தப் படம் உருவாக்கியுள்ளது.

எட்டையபுரம் பகுதியில் சுயம்புவாக உருவானது இந்த அம்மன் ஆலயம். பொதுவாக அம்மன்களுக்கு அசைவ வழிபாடுதான் நடக்கும். ஆனால் இந்த அம்மனோ சுத்த சைவம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது படத்தில் பங்கு கொண்டவர்கள் சைவ உணவையே சாப்பிட்டு விரதம் இருந்துள்ளனர்.

துவக்கத்தில் இது தெரியாமல் படத்தில் நடித்த நாயகி, ஒரு நாள் அசைவ உணவை  சாப்பிட்டுவிட இதனாலேயே உடல் நலக் குறைவு ஏற்பட்டு பெரிதும் அவதிப்பட்டார்.

பின்பு விஷயம் தெரிந்து அம்மனை தொழுது இந்தப் படப்பிடிப்பு முடியும்வரையிலும் சைவத்தையே கடைப்பிடித்தார். செய்த தவறுக்கு பரிகாரமாக மண் சோறும் உண்டு அம்மனை வணங்கினார்.

இந்த ‘சிந்தலக்கரை தாயே’ படத்திற்காக 42 அடி உயர அம்மன் சிலை டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது. இந்த அம்மன் சிலை முன்பாக 40-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனின் அருள் வேண்டி ஆடி பாடும் காட்சிகள் மிகப் பெரிய பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் வெளியாகவுள்ளது..” என்றார்.

Our Score