full screen background image

பாடகி சின்மயி தனது கணவருக்குக் கொடுக்கப் போகும் முதல் பரிசு ‘வாடா டேய் எம் புருஷா…’ பாடல்..!

பாடகி சின்மயி தனது கணவருக்குக் கொடுக்கப் போகும் முதல் பரிசு ‘வாடா டேய் எம் புருஷா…’ பாடல்..!

‘மைனா’ ‘சாட்டை’ ஆகிய படங்களை தயாரித்த ஷலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்துத் தயாரிக்கும் ‘மொசக்குட்டி’ படத்திற்கு ஒரு பாடலை பாடுவதற்காக வரும் மே மாதத்தில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் புதுப்பொண்ணான பாடகி சின்மயியை அழைத்தார்கள்.

பாடுவதற்காக வந்த சின்மயியை இயக்குநர் ஜீவனும், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகமும் வரவேற்று பாடலை அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். சின்மயி ஆர்வத்துடன் அந்தப் பாடல் வரிகளைப் படித்தவர் அதிர்ச்சியாகிவிட்டாராம். அந்த அளவுக்கு அணுகுண்டு வார்த்தைகளாக இருந்ததாம் பேப்பரில்..

அப்படி என்ன வரிகள்ன்னு கேக்குறீங்களா..?

“வாடா டேய் எம் புருசா..
நான் தாரேன் புதுப் பரிசா…
ஓம்போல பேரழகா…
பத்து பத்தா பெத்து தாரேண்டா…”

மிக அழகான, அருமையான தத்துவ முத்துக்கள் நிரம்பிய இந்தப் பாடல் வரிகளைப் படித்ததும் முதலில் சின்மயி குழம்பித்தான் போனாராம். இதை இந்த நேரத்தில் பாடினால் சரியாய் வருமா என்றெல்லாம் யோசித்தாராம். ஆனாலும் விடுவார்களா இசையமைப்பாளரும், இயக்குநரும்.

சின்மயிக்கு முழு தைரியத்தைக் கொடுத்து “இதைவிட பெரிய கர்மத்தையெல்லாம் ஏற்கெனவே தமிழ்ச் சினிமால பாடியாச்சு.. அதையெல்லாம் பார்த்தா இது ரொம்ப சாதாரணமான வார்த்தைகள்ம்மா.. ச்சும்மா கண்ணை மூடிக்கிட்டு பாடிரு.. எது வந்தாலும் நாங்க பார்த்துக்குறோம்..” என்று தைரியம் சொல்லியிருக்கின்றனர்.

இந்த உற்சாகமான வார்த்தைகளைக் கேட்டு சின்மயி மேடமும் சந்தோஷமாகி, “உண்மையிலேயே இந்தப் பாடல் வரப் போகும் என் கணவருக்கு நான் கொடுக்க நினைக்கும் என்னோட முதல் பரிசாகத்தான் இருக்கும். என் கேரியரிலும் இது முக்கியமான பாடலாக இருக்கும்..” என்று கூறி மிகவும் மகிழ்ச்சியோடு இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தாராம். இந்தப் பாடலை இவரோடு பாடகர் ஹரிசரணும் இணைந்து பாடியுள்ளாராம்.

கல்யாணத்தன்னிக்கு கச்சேரில சின்மயி மேடம் இதை பாடுவாங்களா..?

Our Score