நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டவர் பிரேம்ஜி. தனது அண்ணான இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் மட்டும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 42 வயதான பிரேம்ஜிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக அவரது குடும்பத்தினர் அவருக்குத் தீவிரமாக பெண் பார்த்து வருகின்றனர். ஆனால் தற்போதுவரையிலும் எந்த குட் நியூஸும் வெளிவரவில்லை. இதனால் திருமணம் செய்துகொள்ளாமல், முரட்டு சிங்கிள் என பேச்சுலர் பாயாக சுற்றி வருகிறார்.
இந்நிலையில் பாடகி வினைதாவுடன் பிரேம்ஜி நெருக்கமாக இருக்கும் போட்டோ நேற்றைக்கு வெளியானது. வினைதா பெயரில் வெளியான அந்த போட்டோவில் சில ரொமான்ட்டிக் பாடல் வரிகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. அதனை பிரேம்ஜியும் ஷேர் செய்திருந்ததார்.

உடனேயே பிரேம்ஜி-வினைதா காதல் என்றும் திருமணம் என்று செய்திகள் இறக்கை கட்டி பறந்தன.
இது குறித்து பிரேம்ஜி கருத்து ஏதும் கூறாத நிலையில் பாடகி வினைதா மட்டும் பதில் சொல்லியிருக்கிறார்.

“நானும் பிரேம்ஜியும் பல ஆண்டு கால நண்பர்கள். எங்களின் புகைப்படங்களை அவ்வப்போது நாங்கள் ஷேர் செய்து கொள்வதுண்டு. அப்படி ஷேர் செய்யும்போது சிலவற்றை நாங்கள் தமாஷாக எழுதிக் கொள்வோம். அப்படித்தான் பிரேம்ஜியும் நேற்றைக்கு எழுதி ஷேர் செய்திருக்கிறார்.
மற்றபடி இதில் காதல், கல்யாணம் என்பதெல்லாம் இல்லை. நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அது நிச்சயமாக பிரேம்ஜியை அல்ல..” என்று சொல்லியிருக்கிறார்.









