full screen background image

பாடகி ராஜலட்சுமி ஹீரோயினாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ படம்

பாடகி ராஜலட்சுமி ஹீரோயினாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ படம்

தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் குடி கொண்டிருக்கும் மக்கள் இசை பாடகியான ராஜலட்சுமி செந்தில் ‘லைசென்ஸ்’ படம் மூலம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுக நடிகரான விஜய் பாரத் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் ராதாரவி நடிக்கிறார். மேலும் இதில் மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ராஜலட்சுமி செந்திலின் இசை நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் மிகவும் பாப்புலர் ஆனது. தற்போது பட்டி முதல் சிட்டிவரை பாப்புலராக வலம் வரும் ராஜலட்சுமி செந்தில் திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ‘சரா்லி சாப்ளின்-2’ படத்தில் ‘என்ன மச்சான்’ மற்றும் ‘புஷ்பா’ படத்தில் ‘வாய்யா சாமி… வா சாமீ’ ஆகிய பாடல்களை சொல்லலாம்.

“இந்த லைசென்ஸ் படம் தந்தை மகள் பாசப் பின்னணியுடன் பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையாக இருக்கும்” என்கிறார் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இயக்குநரான கணபதி பாலமுருகன்.

இவர் கவுண்டமணி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் இப்படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூடுதல் தகவலாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Our Score