full screen background image

அஜீத் ரசிகர்களுக்கு சிம்பு சொன்ன அறிவுரை..!

அஜீத் ரசிகர்களுக்கு சிம்பு சொன்ன அறிவுரை..!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் விழாவில் அஜீத்தை குறி வைத்து சிம்பு பேசியிருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன.

சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு’ படத்தின் 50-வது நாள் விழா இன்று மாலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது, “இந்தப் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இசையமைத்த ரகுமானுக்கு நன்றி. மல்லிப் பூ’ பாடல் எழுதிய தாமரைக்கும் நன்றி.

இப்போது மக்களின் ரசனை மாறி உள்ளது. அவர்கள் விதம்விதமான சினிமாக்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதை சினிமாவின் பொற்காலம் என்பேன்.

அண்மையில் வெளியான ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’, தற்போது வெளியான ‘லவ் டுடே’ என அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன. மக்கள் வித்தியாசமான படங்களை விரும்பி பார்க்கிறார்கள்.

உங்களிடம் முக்கியமாக ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.. தயவு செய்து ஒவ்வொரு படத்திற்கும் அப்டேட் கேட்காதீர்கள். உங்களுக்காக.. ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் இப்படி அடிக்கடி அப்டேட் கேட்பதால் படத்தில் ஏதாவது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. நல்ல படங்களை உங்களுக்கு வழங்க காத்துக் கொண்டிருக்கிறோம். என் படத்திற்கு மட்டுமல்ல; இனிமேல் எந்தப் படத்திற்கும் அப்டேட் கேட்காதீர்கள். இதை சொல்ல சொன்னது பத்து தல’ இயக்குநர்தான்.

எல்லா ரசிகர்களும் ஹீரோவை கொண்டாடுவார்கள். ஆனால், நான் என் ரசிகர்களை கொண்டாடுவேன். அது இனியும் தொடரும்…” என்றார்.

வலிமை’ பட சூட்டிங் சமயத்தில்தான் அஜித் ரசிகர்கள் அடிக்கடி ‘வலிமை அப்டேட்’, ‘வலிமை அப்டேட்.. என கேட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டிங் செய்து கொண்டு இருந்தனர்.

இதனால், சிம்பு அஜித் ரசிகர்களை குறி வைத்துதான் இப்படி பேசினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  •  
Our Score