full screen background image

‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…!

‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…!

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர். & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிரண்ட்ஷிப்.’

இந்தப் படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், லாஸ்லியா, சதிஷ், J.S.K.சதீஷ்குமார், வெங்கட் சுபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இயக்கம் – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா, தயாரிப்பு – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா, இணை தயாரிப்பு – வேல்முருகன், ஒளிப்பதிவு – சாந்த குமார், இசை – D.M.உதயகுமார், படத்தொகுப்பு – தீபக் S.தவாரக்நாத், கலை இயக்கம் – மஹேந்திரன், வசனம் – P.S.ராஜ், ஒலி வடிவமைப்பு – ஆனந்த்(4 Frames), நடன இயக்கம் – ஷாம் சூர்யா, ஆடை வடிவமைப்பு – வசந்த், ஸ்டில்ஸ்- சிவா, நிர்வாக தயாரிப்பு – ரோபின், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்.

இந்த ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவராக நடிக்கும் ஹர்பஜன் தீவிர ரஜினிகாந்த் ரசிகராக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம் பெறும்  “Superstar  anthem” என்ற பாடலை நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். நடிகர் சிம்பு இந்தப் பாடலை பாடியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் D.M.உதயகுமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடலைப் பாடிய சிம்பு தொலைபேசியில்  ஹர்பஜனுக்கு  பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் “பாடல் சிறப்பாக உருவாகியிருக்கிறது. திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும்…” எனவும் வாழ்த்தியுள்ளார். இதற்கு பதிலளித்த ஹர்பஜன் “எனக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பனாக நீங்கள் கிடைத்துள்ளீர்கள். சென்னையில் நாம் இருவரும் விரைவில் சிந்திப்போம்” என கூறியுள்ளார் .

‘பிரண்ட்ஷிப்’ திரைப்படம்  விரைவில் பல இந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Our Score