“மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு..” – இயக்குநர் பாரதிராஜா பாராட்டு..!

“மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு..” – இயக்குநர் பாரதிராஜா பாராட்டு..!

சிம்புவின் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நடிகர் சிம்புவை பாராட்டித் தள்ளிவிட்டார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசும்போது, “நான் பார்த்து வளர்ந்த பிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். மிகவும் ஒழுக்கமானவர். அவரைப் பற்றி அப்படி, இப்படி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம்.

இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அது போன்ற படமும் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தின் இசை மிகவும் அருமையாக உள்ளது. நிதி அகர்வால் அருமையாக தமிழ் பேசுகிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

நந்திதா சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நன்றாக நடித்தார்கள்.

படப்பிடிப்பில் இருப்பது போன்ற எண்ணமே தோன்றவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்றுதான் தோன்றியது. ஒளிப்பதிவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. நேற்த்தியான திறமைக்காரர் திரு. இப்படம் குடும்ப பாங்கான படம். இப்படத்தை பொழுதுபோக்காக பார்க்காமல் குடும்பத்தோடு வந்து பாருங்கள்.

நாங்கள் அந்தக் காலத்தில் 27 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். ஆனால், இப்போது டிஜிட்டல் உலகத்திலேயே 28 நாட்களில் ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றால்… அதற்கு இயக்குநர் சுசீந்திரனின் திறமைதான் காரணம்.

என் பிள்ளை மனோஜ் எனக்கு ஜுனியராக நடித்து நான் பார்த்த படம் இந்த ‘ஈஸ்வரன்’ என்பதில் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது…” என்றார்.

Our Score