15 கிலோ எடையைக் குறைத்து ஸ்லிம்மான சிம்பு..!

15 கிலோ எடையைக் குறைத்து ஸ்லிம்மான சிம்பு..!

கஷ்டப்படாமல் நடிக்க வேண்டும் என்கிற கொள்கையுடையவர் சிம்பு. அவருடைய கடைசியான படங்களில் அதிகமாக உடலை வருத்திக் கொள்ளாமல் இருக்கின்ற நிலைமையிலேயே தனது நடிப்பைக் காண்பித்து வருகிறார்.

ஆனால் இந்தக் கொரோனா காலத்திய லாக் டவுனில் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் உடற்பயிற்சி செய்கிறேன் என்று சொல்லி அதையெல்லாம் செய்து அதையும் வீடியோ எடுத்து வெளியிட்டார். ‘ஈஸ்வரன்’ படத்தில் கொஞ்சம் மெலிந்த உடலுடன் நடித்திருந்தார். அதுவுமே அவரது ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது.

இப்போது கெளதம் மேனனின் படத்திற்காக கிட்டத்தட்ட 15 கிலோவரையிலும் எடையைக் குறைத்து ஆச்சரியத்தைத் தந்திருக்கிறார் சிம்பு. இதற்காகக் கடுமையான டயட்டில் இருந்தும், உடற்பயிற்சி எடுத்தும் சின்னப் பையனைப் போன்ற நிலைமைக்கு வந்திருக்கிறார் சிம்பு.

இது இந்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கான முன்னோட்டமாம். இதையும் போட்டோ எடுத்து வெளியிட அதுவும் இப்போது வைரலாகி வருகிறது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் 4 நாட்கள் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடந்து முடிந்துள்ளது.

Our Score