தென்னிந்திய சினிமாவின் அடையாளமான பேரழகி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பதாக இன்றைக்கு பெருமையுடன் அறிவித்துள்ளது.
இந்தப் படம் ‘சில்க் ஸ்மிதா – Queen of the South’ என்ற பெயரில் தயாராகப் போகிறது. இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இந்தப் படத்தில் நடிகை சந்திரிகா ரவி சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார்.
ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B.விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது.
இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்,
இது பார்வையாளர்களுக்கு காந்தக் கண்ணழகி – சில்க் ஸ்மிதாவைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.!