full screen background image

ஸ்டண்ட் மாஸ்டர் ஜோதி, தயாரித்து, நடித்து, இயக்கும் திரைப்படம் சிலம்பம்!

ஸ்டண்ட் மாஸ்டர் ஜோதி, தயாரித்து, நடித்து, இயக்கும் திரைப்படம் சிலம்பம்!

லட்சுமி நாராயணா பிலிம்ஸ் தயாரிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் DR.A.K.S. JOTHI இயக்கி நடிக்கும் “சிலம்பம்” திரைப்படம்.

படை பலம், பண பலம், அதிகார பலத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு ஏழை மாணவியின் வலியை சொல்லும் கதைதான் இந்த ‘சிலம்பம்’ திரைப்படம்.

இந்த ‘சிலம்பம்’ படத்தைப் பற்றி ஸ்டண்ட் மாஸ்டரும், இயக்குநருமான DR.A.K.S ஜோதி பேசும்போது, “சிலம்பாட்டத்தை நேசிக்கும் சிலம்பாட்டத்தை நேசிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவர்களிடமும் சிலம்பக் கலையை ஊக்குவிக்கும் ஒரு படமாகவும் அதே கணம் சிலம்ப போட்டியில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தோலுரிக்கும் படமாகவும் இருக்கும்” என்கிறார்.

குமார் ஒளிப்பதிவு செய்ய, D இசையமைக்கிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

Our Score