full screen background image

“நானும், சித்தார்த்தும் HOME WORK செய்துவிட்டுத்தான் இதில் நடித்தோம்”-‘நவரசா’ பற்றி பார்வதி மேனன்

“நானும், சித்தார்த்தும் HOME WORK செய்துவிட்டுத்தான் இதில் நடித்தோம்”-‘நவரசா’ பற்றி பார்வதி மேனன்

தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படம், Netflix ஓடிடி தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6-ம் தேதியன்று வெளியாகிறது.

இந்தப் படத்தில்  இன்மை’ என்ற கதையில் நடிகை பார்வதி திருவோத்துவும், நடிகர் சித்தார்த்தும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகை பார்வதி திருவோத்து,  மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் விதவிதமான பாத்திரங்களில், மாறுபட்ட நடிப்பை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை குவித்தவர்.

இந்த இன்மை கதையில் நடித்தது  குறித்து நடிகை பார்வதி திருவோத்து பேசும்போது, “சித்தார்த்தும், நானும் படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்னர் zoom calls  மூலம் ஆன்லைனில், சில முறை பேசி, இப்படம் குறித்து ரிகர்சல் செய்து கொண்டோம்.  இணைய வெளியிலிருந்து அப்படியே படப்பிடிப்பிலும்  அதே மாயம் நிகழந்தது அற்புதமாக இருந்தது.

எவ்வித தடங்குகளுமின்றி, மிக எளிதாக இந்தப் படப்பிடிப்பு நிகழந்தேறியது. முன்னணி கலைஞர்கள் பங்கு பெற, அத்தனை பேரின் அர்ப்பணிப்பிலும் வெகு இயல்பான ஒரு அற்புத படைப்பாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

parvathy menon

நடிகர் சித்தார்த் கண்களாலேயே பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த நடிகர். என்னை விட்டு தூரமாக அவர் நின்றாலும், அவர் கண்களின் வழி அவரது உணர்வுகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். படப்பிடிப்பில் இது, எனக்கு நடிப்பில்  மிகப் பெரும் உதவியாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்தது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.

திரைத்துறை நண்பர்கள் இணைந்து, தங்கள் சக தோழர்களின் நலனுக்கு இந்த ஆந்தாலஜி திரைப்படத்தினை உருவாக்கியிருப்பதும், இதில் எனது பங்களிப்பு இருப்பதிலும் எனக்கு மகிழ்ச்சிதான்…” என்றார்.

 
Our Score