full screen background image

ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு..!

ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத் தலைவர் பூச்சி முருகன் மூவரும் இன்று காலை நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்கள்.

பின்னர் இது குறித்து நடிகர் நாசர் பேட்டியளித்தபோது, இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து, நடிகர் சங்க கட்டிட பணிகளை மீண்டும் துவங்க உள்ளோம். அதற்காக சங்கத்தின் முக்கிய பிரமுகர்களை ஒவ்வொருவராக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி இன்று ரஜினி ஸாரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம். அப்போது அவர், கட்டட பணிகள் பற்றி மிகவும் அக்கறையாக விசாரித்தார். மேலும், கட்டிடம் குறித்து நிறைய ஆலோசனைகளையும் வழங்கினார்…” என்றார்.

Our Score