full screen background image

கடவுள் பற்றிய கமல்ஹாசனின் கேள்விக்குப் பதில் சொல்லும் ‘மாயோன்’ படம்

கடவுள் பற்றிய கமல்ஹாசனின் கேள்விக்குப் பதில் சொல்லும் ‘மாயோன்’ படம்

“கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்” என்று ‘தசாவதாரம்’ படத்தில் கமல் பேசிய வசனத்திற்கு தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு எங்களது படத்தில் பதில் கிடைத்திருப்பதாக மாயோன்’ படக் குழு தெரிவித்துள்ளது.

இந்த ‘மாயோன்’ படத்தில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் டீசரும் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது.

தற்போது 600-க்கும் மேலான திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்துடன் இந்த ‘மாயோன்’ படத்தின் டிரெய்லரும் வெளியாகிறது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “தசாவதாரம் படத்தில் “கடவுள் இருந்தால் நன்றாகதான் இருக்கும்” என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு இந்த மாயோன்’ படத்தில் பதில் கிடைத்திருப்பதாக” கூறியுள்ளனர்.

இதனால் மாயோன்’ திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலும் அதிகரித்துள்ளது.

இந்த ‘மாயோன்’ திரைப்படம் வரும் ஜூன் 24-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score