நடிகர்கள் ரமேஷ் கண்ணா மற்றும் விமலின் வேட்பு மனுக்கள் தள்ளுபடியானது..!

நடிகர்கள் ரமேஷ் கண்ணா மற்றும் விமலின் வேட்பு மனுக்கள் தள்ளுபடியானது..!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடிகர் சங்கத்தில் நடைபெற்றது.

நீதியரசர் பத்மநாபன் முன்னிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரின் முன்னிலையிலும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

அப்போது மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 67 வேட்பு மனுக்களில் 58 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 9 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களில் இயக்குநர் கே.பாக்யராஜின் அணியைச் சேர்ந்த நடிகை குட்டி பத்மினி, நடிகர்கள் பிரசாந்த், ரமேஷ் கண்ணா, விமல் ஆகியோரின் வேட்பு மனுக்களும் அடக்கம்.

nomination-accepted-lists-1

nomination-accepted-lists-2

nomination-accepted-lists-3

nomination-accepted-lists-4

இதில் நடிகை குட்டி பத்மினியின் வேட்பு மனுவை முன் மொழிந்த அசோக் என்பவர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்பதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

ஆனால் குட்டி பத்மினி தாக்கல் செய்திருந்த இரண்டாவது வேட்பு மனுவில் குறைகள் ஏதும் இல்லை என்பதால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

nomination-accepted-lists-5

நடிகர் பிரசாந்த் தாக்கல் செய்த ஒரு மனுவில் தன்னுடைய உறுப்பினர் எண்ணைக் குறிப்பிடாததாலும், அவருக்காக இரண்டாவதாக வழி மொழிய உறுப்பினர் யாரும் கையொப்பமிடாததாலும் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

ஆனால் நடிகர் பிரசாந்த் தாக்கல் செய்திருந்த இரண்டாவது வேட்பு மனுவில் குறைகள் ஏதுமில்லை என்பதால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நடிகர் ‘சிசர்’ மனோகர் தாக்கல் செய்த ஒரு மனுவில் அவரை வழி மொழிந்த உறுப்பினரின் பெயரும், அவரது உறுப்பினர் எண்ணும் இல்லாததால் அந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் ‘சிசர்’ மனோகர் தாக்கல் செய்திருந்த இன்னொரு வேட்பு மனுவில் குறைகள் ஏதும் இல்லாததால் அது ஏற்கப்பட்டது.

நடிகர் ரமேஷ் கண்ணா சங்கத்திற்கான ஆண்டு சந்தாவை கட்டாததால் சங்க விதி எண் 34-ன் படி தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டதால், அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தான் ஆயுட் கால உறுப்பினர் என்பதால் தனக்கு ஆண்டு சந்தா கட்டும் விதிமுறை பொருந்தாது என்று நடிகர் ரமேஷ் கண்ணா நீண்ட நேரம் நீதிபதியிடம் வாதாடிப் பார்த்தார். ஆனால் ரமேஷ் கண்ணா முழுமையான ஆயுட் கால உறுப்பினராக இல்லை என்பதால் அவரது வாதம் ஏற்கப்படவில்லை.

இதேபோல் நடிகர் விமலும் ஆண்டு சந்தாவை கட்டாததால் அவரது வேட்பு மனுவும்  தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்போது மீதமிருக்கும் 58 வேட்பு மனுக்களில் யார், யார் வாபஸ் வாங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தே, இறுதியாக களத்தில் எத்தனை பேர் நிற்கப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.