full screen background image

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-நாசர்-விஷால் அணி அபார வெற்றி..!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்-நாசர்-விஷால் அணி அபார வெற்றி..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்ட தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி அனைத்து நிர்வாகப் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் நாசர் 1701 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதில் 884 வாக்குகள் நேரடிப் பதவிலும், 217 வாக்குகள் தபால் பதிவிலும் கிடைத்துள்ளன.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் கே.பாக்யராஜ் 703 வாக்குகளை நேரடிப் பதவிலும், 351 வாக்குகளை தபால் பதிவிலும் பெற்றுள்ளார்.

இதன் மூலம் நடிகர் நாசர் 647 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜை தோற்கடித்துள்ளார். இதில் செல்லாத வாக்குகள் 33.

செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் விஷால் 1720 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதில் 898 வாக்குகளை நேரடிப் பதிவிலும், 822 வாக்குகளை தபால் பதவிலும் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் ஐசரி கே.கணேஷ் 1032 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.  இதில் 687 வாக்குகளை நேரடிப் பதிவிலும், 345 வாக்குகளை தபால் பதிவிலும் பெற்றுள்ளார்.

இதன் மூலம் நடிகர் விஷால் 688 வாக்குகள் வித்தியாசத்தில் ஐசரி கணேஷை தோற்கடித்துள்ளார். இதில் செல்லாத வாக்குகள் 35.

பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் கார்த்தி தபால் வாக்குகளில் 818, மற்றும் நேரடி வாக்குகளில் 1009-ஐயும் பெற்று மொத்தமாக 1827 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் பிரசாந்த் நேரடிப் பதிவில் 568 வாக்குகளையும், 351 வாக்குகளை தபால் பதிவிலுமாக மொத்தம் 919 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் நடிகர் கார்த்தி 908 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் பிரசாந்தை தோற்கடித்துள்ளார். இதில் செல்லாத வாக்குகள் 42.

துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் பூச்சி முருகன் 1612 வாக்குகளையும், நடிகர் கருணாஸ் 1605 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் நடிகர் பூச்சி முருகன் நேரடிப் பதிவில் 821 வாக்குகளையும், தபால் பதிவில் 791 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

நடிகர் கருணாஸ் நேரடிப் பதிவில் 801 வாக்குகளையும், தபால் பதிவில் 904 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

இவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை குட்டி பத்மினி 1015 வாக்குகளையும், நடிகர் உதயா 973 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.

இதில் நடிகை குட்டி பத்மினி நேரடிப் பதிவில் 665 வாக்குகளையும், தபால் பதிவில் 350 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

நடிகர் உதயா நேரடிப் பதிவில் 610 வாக்குகளையும், தபால் பதிவில் 363 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

இதிலும் 65 வாக்குகள் செல்லாத வாக்குகளாகும்.

செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Our Score