full screen background image

சமுத்திரக்கனியும், சூரியும் குரல் கொடுத்திருக்கும் ‘கேட்ட வார்த்தை; கெட்ட வார்த்தை’ குறும் படம்!

சமுத்திரக்கனியும்,  சூரியும் குரல் கொடுத்திருக்கும் ‘கேட்ட வார்த்தை; கெட்ட வார்த்தை’ குறும் படம்!

செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் ‘கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை’…

அஷ்வினி – மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய ‘கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை’ குறும் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி கிராமத்தைச் சார்ந்த அஷ்வினி என்ற இளம் இயக்குநரின் இரண்டாவது குறும் படம் ‘கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை’..

யாரும் கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்பதற்காக, கெட்ட வார்த்தையில் பேசி எடுக்கப்பட்ட குறும்படம் ‘கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை’.

‘யாகாவாராயினும் நாகாக்க’ என்னும் திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும் படத்திற்கு இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் தங்களது வாய்ஸ் ஓவர் கொடுத்து இக்குறும் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்..

இக்குறும்படத்தை பற்றி இயக்குநர் அஷ்வினி மற்றும் மணிவண்ணன் கூறியதாவது:

“நாங்கள் இந்தக் குறும் படத்தை எடுக்க முக்கிய காரணம் யாரும் கெட்ட வார்த்தையை உறவுகளுக்கு இடையே பேசக் கூடாது என்பதுதான்..” என்றனர்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் தா.முருகானந்தம், இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பவித்ரா, அட்ரஸ் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‌‌

இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஜேசன் வில்லியம்ஸ், இசை – அருணகிரி படத் தொகுப்பு – ஷான் லோகேஷ் கலை இயக்குநர் – என்.கே.ராகுல்

இப்படம் முழுக்க முழுக்க ஒரே நாளில் சென்னை வளசரவாக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்டது..

Our Score