லிப்ரா புரொடெக்சன்ஸ் நடத்தும் பிரம்மாண்டமான குறும் பட போட்டி..!

லிப்ரா புரொடெக்சன்ஸ் நடத்தும் பிரம்மாண்டமான குறும் பட போட்டி..!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரொடெக்சன்ஸ்.

‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’ ஆகிய படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம், தற்போது குறும்பட இயக்குநர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவும், அவர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாகவும் குறும் பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

மிகச் சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச் சிறந்த குறும்பட இயக்குநர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என திரைப்படங்ளை போன்றே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஒவ்வொரு குறும்படமும் 17 நிமிடங்களுக்கு அதிகமான கால அளவில் இருக்கக் கூடாது என்பதும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதும் போட்டியின் முக்கிய விதிகளாகும்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்த குறும் படங்களை பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும் படங்களை தேர்ந்தெடுப்பார்கள்.. அந்த பத்து படங்களும் விழா நடைபெற இருக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் மொத்தமாக திரையிடப்பட்டு அதில் அனைத்து பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அன்று மாலையே பரிசளிப்பு விழா மிகப் பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.

முதல் பரிசாக 10 லட்சம், 2-ம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3-ம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும் படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

உங்கள் குறும்பட சிடிகளை No.14, 1st Cross Street, Lambert Nagar, AlwarThirunagar, Chennai - 87 எனும் முகவரிக்கு அனுப்பலாம்.

அல்லது thelibraproductions@gmail.com எனும் ஈமெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

வரும் ஜூலை-15-ம் நாள் போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்பவதற்கான கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு Mobile: 97899 16561, Office: 044 - 4208 9658 இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்த போட்டி குறித்த அடுத்தக் கட்ட விபரங்களை லிப்ரா புரடக்சன்ஸ் பேஸ்புக் பக்கத்தின் மூலம் அவ்வப்போது போட்டியாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/LIBRAShortFilmAwards/

கலையை, சினிமாவை தங்களது உயிர் மூச்சாக, கனவாக கொண்டு உயிர் வாழும் படைப்பளிகள், கலைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.