full screen background image

கலக்க வருகிறது கோடி ராமகிருஷ்ணாவின் ‘சிவ நாகம்’

கலக்க வருகிறது கோடி ராமகிருஷ்ணாவின் ‘சிவ நாகம்’

தெலுங்குலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான கோடி ராமகிருஷ்ணா ஆற, அமர படமெடுத்தாலும் அது, அவரது முந்தைய படங்களின் வசூலையும், புகழையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும். அந்த அளவுக்கு படத்துக்குப் படம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார் கோடி.

‘அருந்ததி’ என்கிற சூப்பர் டூப்பர் ஹிட்டினை கொடுத்துவிட்டு அமைதியான கோடி.. இப்போது மீண்டும் ‘சிவநாகம்’ என்கிற படம் மூலமாக கலக்கியெடுக்க வருகிறார்.

இந்தப் படத்தின் கதைக்காக ஏழு வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார் கோடி ராமகிருஷ்ணா. அதேபோல் இதை படமாக்கவும் 3 வருடங்கள் நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

120 அடி உயர நாகம்தான் படத்தின் கதாநாயகன். சிவ பக்தனான அந்த நாகத்தை சுற்றித்தான் கதை நகர்கிறதாம்.

Ramya

மேலும், திவ்யா ஸ்பந்தனா, திகாந்த், ராஜேஷ், விவேக் உபாத்யாயா, முகுல்தேவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – குரு கிரண், படத் தொகுப்பு – ஜானி ஹர்ஷா, விஎஃப்எக்ஸ் – முகுட்டா, எழுத்து, இயக்கம் – கோடி ராமகிருஷ்ணா.

இந்தப் படத்தில் ஒரு சிறப்பம்சம் மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தனை கிராபிக்ஸ் முறையில் இதில் நடிக்க வைத்திருப்பதுதான். இதுதான் படத்தின் ஹைலைட் என்கிறார்கள்.

அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இந்தப் படத்தில் இருப்பதால் நான் ஈ, பாகுபலி ஆகிய படங்களில் பணியாற்றிய திறமைமிக்க கிராபிக்ஸ் வல்லுநர்கள் இந்தப் படத்திற்காகவும் இரவு, பகல் பாராமல் உழைத்திருக்கிறார்களாம்.

Ramya_2

‘ரஜினி முருகன்’ படத்தினை வெளியிட்ட பென் மூவிஸ் நிறுவனமும், சோஹைல் அன்சாரியின் பிளாக் பஸ்டர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், சாஹித் குரேஷியின் இன்பாக்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்துள்ளன.

‘காஞ்சனா’, ‘அருந்ததி’ படங்களை வாங்கி விநியோகம் செய்து நன்கு கல்லா கட்டிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தையும் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது.

இந்த மாதம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வரும் ஜூலை மாதம் இந்தப் படம் ரிலீஸாக உள்ளது.

Our Score