full screen background image

சென்னை வெள்ள சேதத்திற்கு நடிகர் ஷாரூக்கான் 1 கோடி நிதியுதவி..!

சென்னை வெள்ள சேதத்திற்கு நடிகர் ஷாரூக்கான் 1 கோடி நிதியுதவி..!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது புதிய படமான ‘தில்வாலே’ படக் குழுவின் சார்பாக நடிகர் ஷாரூக்கான் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

வரும் 18-ம் தேதி உலகம் முழுவதிலும் ரிலீஸாக காத்திருக்கிறது ஷாரூக்கானின் சொந்தத் திரைப்படமான ‘தில்வாலே’. இத்திரைப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல இந்தி நடிகை கஜோல் ,ஷாருக்கானுடன் ஜோடியாக நடித்துள்ளார். ரோகித் ஷெட்டி இயக்கியுள்ளார்.

sharukhan-letter

சென்னையில் கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளச் சேதம் பற்றி ஏற்கெனவே டிவீட்டரில் தனது வருத்தங்களைத் தெரிவித்திருக்கும் ஷாரூக்கான் இன்றைக்கு தனது தில்வாலே படக்குழுவின் சார்பாக 1 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

சென்னைவாழ் மக்கள் சார்பாக அவருக்கு நமது நன்றிகள்..!

Our Score