நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை ஆதரவளித்து, எனக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமானம் படத்தில் இடம்பெற்ற “Lets Go Party” நேற்று வெளியானது. சக்கரக்கட்டி படத்தில் இடம்பெற்ற “டாக்ஸி டாக்ஸி” என்ற பாடலின் மூலம் எனக்கு அடையாளம் அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் அவர்களால் “Lets Go Party” பாடல் வெளியானது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதும் அதே வேளையில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இப்பாடலில் நடித்த நடிகர்கள் ஜாக்கி ஷாரோப், பிரபு, பார்த்திபன், பாண்டியராஜன், விவேக், ரம்யா கிருஷ்ணன், ராதிகா, ஆர்யா, விஜய் ஆண்டனி, சூரி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வித்தார்த், ஆரி, ப்ரித்திவி, கலையரசன், அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா ராஜேஷ், மோட்டை ராஜேந்திரன், பிரசன்னா, கிருஷ், சங்கிதா, பாபி சிம்ஹா, மற்றும் எனது குடும்பத்தாரான எனது தாய் பூர்ணிமா பாக்யராஜ், தந்தை k.பாக்யராஜ் எனது மனைவி கீர்த்தி ஆகியோருக்கு எனது இதயம் கனிந்த நன்றியை “முப்பரிமானம்” படக்குழுவின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
27 நடிகர்கள் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்தப் பாடல் 3 நாட்களில் படமாக்கப்பட்டது. இரு மாதிரிகளாக படம்பிடிக்கப்பட்ட இப்பாடலின் ஒரு பதிப்பு தற்போது வெளியாகிவுள்ளது. இப்பாடலின் முழுவடிவம் திரைப்படத்தில் இடம்பெறும்.
இத்தருணத்தில் “Lets Go Party” பாடலுக்காக மிகவும் சிறந்த முறையில் நடனப் பயிற்சி அளித்த பிருந்தா மாஸ்டருக்கும், மேலும் இப்பாடல் சிறப்பாக அமைய மிகவும் கடினமாகச் செயல்பட்ட இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு ராசாமதி, கலை இயக்குநர் மாயபாண்டி, இயக்குநர் அதிரூபன், தயாரிப்பாளர் விசு, குமார் மற்றும் படத்தின் நடிகர் நடிகையருக்கு எனது நன்றிகள்.
“Lets Go Party” பாடல் வெளியான தருணம் முதல் இப்பாடலை மிகப்பெரும் வெற்றிப்பாடலாக உருமாற்றிய பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் அனைத்து தர ரசிகர்களுக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
– சாந்தனு பாக்யராஜ்