full screen background image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படம் துவங்கியது..!

Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில் புதிய படம் இன்று துவங்கியது.

‘மதுரை வீரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

மற்றும் கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் நடிக்க, திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

கதை இயக்கம் – U.அன்பு, திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு, ஒளிப்பதிவு – S.R.சதீஷ்குமார், படத் தொகுப்பு – இளையராஜா, சண்டை இயக்கம் – மகேஷ் மேத்யூ, கலை இயக்கம் – P.ராஜு, புகைப்படங்கள் – சக்தி பிரியன், பத்திரிக்கை தொடர்பு – சதீஸ், சிவா AIM, விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக்.

புதுமையான திரைக்கதையில், முழுக்க, முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக் களத்தில், பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

‘வால்டர்’ மற்றும் ‘ரேக்ளா’ பட இயக்குநர் U.அன்புவின் கதையில், ‘நட்பே துணை’ இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவின் திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது.

கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மேலும் ஒரிசா தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பை ஆடி 18-ம் தேதி நன்நாளில் அறிவிக்க படக் குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு படக் குழுவினர் கலந்து கொள்ள எளிமையாக இன்று நடந்தேறியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு, படக் குழுவினரை வாழ்த்தினார்.

Our Score