full screen background image

“இயக்குநர்களை விட்டுக் கொடுங்க பிரதர்..” – விஜய் சேதுபதியிடம் கோரிக்கை வைத்த சித்தார்த்..!

“இயக்குநர்களை விட்டுக் கொடுங்க பிரதர்..” – விஜய் சேதுபதியிடம் கோரிக்கை வைத்த சித்தார்த்..!

வான்சன் மூவிஸ் சார்பில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷான் சுதர்சன் என்னும் தமிழர் தயாரித்திருக்கும் முதல் படம் ‘சேதுபதி’.

IMG_0456

இதில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி மிக வித்தியாசமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். கர் பிரசாத் படத் தொகுப்பு செய்திருக்கிறார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தினை இயக்கிய சு.அருண்குமார் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விஜய் சேதுபதியின் ரசிகர்கள் திரளாக திரண்டு வந்திருந்தனர். விஜய் சேதுபதிக்கு பின்பு ஆர்.ஜே.பாலாஜிக்குத்தான் அதிக கைதட்டல்கள் கிடைத்தன என்பது அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியமான விஷயம்.

DCIM (54)

துவக்கத்தில் தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் ஆஸ்திரேலியாவில் வசிப்பவராக இருந்தாலும் மிக தெளிவான தமிழில் பேசி அனைவரையும் வரவேற்றார். இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா படத்தில் இடம் பெறும் மூன்று பாடல்களை மேடையில் இசைத்துக் காட்டினார்.

படத்தின் டிரெயிலரும், 2 பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. பாடல் காட்சிகளிலும், டிரெயிலரிலும் விஜய் சேதுபதியே ஆக்கிரமித்திருந்தார். அவருடைய போலீஸ் கெட்டப், போலீஸ் படங்களின் வரலாற்றில் இந்தப் படத்தை பிடித்து வைக்கப் போகிறது என்பதையே காட்டுகிறது.

DCIM (45)

பின்பு பல சினிமா பிரபலங்களும் மேடையேறி படக் குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள். இதில் நடிகர் சித்தார்த் பேசும்போது, “நான் விஜய் சேதுபதியின் மிகப் பெரிய ரசிகன். ‘பீட்சா’ பார்த்திட்டு அரண்டுட்டேன். அப்பவே கார்த்திக் சுப்புராஜ்கிட்ட ‘நாம ஒரு படம் பண்ண்ணும் ஸார்’ என்றேன். அவரோ ‘இப்ப வேணாம் ஸார். என்னோட முதல் ஹீரோகூடவே அடுத்தப் படம் செய்யப் போறேன்’னாரு. ‘சரி’ன்னு விட்டுட்டேன். அப்புறம் ‘சூது கவ்வும்’ படம் வந்தது. அந்தச் சமயத்துல நலன் குமாரசாமிகிட்ட ‘நாம சேர்ந்து படம் செய்யணும்’னு கேட்டேன். அவரும் ‘நானும் விஜய் சேதுபதிகூடவே அடுத்த படம் செய்யப் போறேன் ஸார். அப்புறம் பார்த்துக்கலாம்’னு சொன்னாரு. என்னடா இது எல்லாரும் அதே ஹீரோவை வைச்சே படம் செய்யணும்னு சொல்றாங்களேன்னு அப்பவே யோசிச்சேன். ‘பண்ணையாரும் பத்மினியும்’ வந்துச்சு. அப்ப இந்த அருண்குமார்கிட்ட கேட்டேன். ‘நாம சேர்ந்து ஒரு படம் செய்வோமா?’ன்னு.. இவரும் அதையேதான் சொன்னாரு.. ‘இல்ல ஸார். நானும் விஜய் சேதுபதியும் அடுத்து ஒரு படம் பண்ணப் போறோம்’ன்னு..

ஆக.. விஜய் சேதுபதியை வைச்சு படம் இயக்குற இயக்குநர்கள் அடுத்த ஹீரோவுக்கு கிடைக்கவே மாட்டாங்கன்றதுதான் நிஜம். இந்த அளவுக்கு ஒரு பிரெண்ட்லியா ஒரு ஹீரோ இருக்காருன்னு அது நிச்சயமா மிகப் பெரிய பாராட்டுக்குரிய விஷயம்.. விஜய் சேதுபதி கொஞ்சம் என்னை மாதிரியான ஹீரோக்களுக்காக இயக்குநர்களை விட்டுக் கொடுக்கணும். இப்படி எல்லாரும் அவரை வைச்சுத்தான் படம் செய்வோம்ன்னு சொன்னால்.. நானெல்லாம் என்ன செய்யறது..?” என்றார்.

Sethupathi Audio Launch Stills (38)

நடிகர் சிபிராஜ் பேசும்போது, “நான் எத்தனையோ போலீஸ் படங்களை பார்த்திருக்கேன். உண்மையான தமிழ்நாட்டு போலீஸை இப்பத்தான் நான் பார்க்குறேன். இதுல விஜய் சேதுபதி ஓங்கி அடிக்கிறதெல்லாம் தேவையே இல்லை. அவரோட பார்வையே போதும்.. ஒன்றரை டன்னை தூக்கி அடிக்கிற மாதிரியிருக்கு..” என்றார்.

Sethupathi Audio Launch Stills (42)

இயக்குநர் சு.அருண்குமார் பேசும்போது, “இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க நிறைய பேர்கிட்ட கேட்டேன். எல்லாரும் கதையைக் கேட்டுட்டு முடியாதுன்னுட்டாங்க. 2 குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்கணும்னு சொன்னவுடனேயே முடியாதுன்னுட்டாங்க. ஆனா ரம்யா நம்பீசன் மட்டும் எந்த தயக்கமும் இல்லாமல் ‘ஓகே ஸார்’ன்னு சொல்லி நடிச்சாங்க.. அவங்களுக்கு என்னோட நன்றிகள்..” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, “பண்ணையாரும் பத்மினியும்’ படம் செய்யும்போதே அடுத்து இன்னொரு படம் செய்யணும்னு அருண்குமார்கிட்ட சொன்னேன். அவரும் அதற்கு தயாராகத்தான் இருந்தார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கிட்ட வரும்போது நல்லா விசாரிச்சேன். படம் செய்யணும்னு விருப்பமா இருக்கு. வந்திருக்கோம் என்றார். நானும் கொஞ்ச நாளா அலையவிட்டு.. கொஞ்சம் பயமுறுத்தியும் பார்த்தேன். முடியலை. அவங்க உறுதியா இருந்தாங்க.. அதுக்கப்புறம்தான் இந்த பிராஜெக்ட்டை ஆரம்பிச்சோம். எனக்காக எவ்வளவு செலவுன்னாலும் யோசிக்காமல், தயங்காமல் செய்து, இதை தயாரிச்சிருக்காங்க. அவங்களுக்கு என்னோட நன்றி.

இந்தப் படத்தில் என் பிள்ளைகளா நடித்த குட்டிப் பசங்க ரெண்டு பேருமே அற்புதமாக நடிச்சிருக்காங்க. ஒரு காட்சியை சொல்லிட்டா அவங்களே ரிகர்சல்ல இப்படி செய்யணுமா..? இது போதுமா..? இன்னும் வேணுமான்ற அளவுக்கு நடிப்பைக் கொட்டிட்டாங்க.. படத்துல எங்களைவிட நல்லா நடிச்சிருக்கிறவங்க இவங்கதான்.. இந்த விழாவுக்கு வந்து இப்படி எங்களை பெருமிதப்படுத்தியதுபோல இந்தப் படத்துக்கும் எல்லாரும் ஆதரவு தரணும்னு கேட்டுக்குறேன்..” என்றார்.

Our Score