“நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்…” – ‘செல்ஃபி’ படம் உருவாக்கும் வில்லங்கம்!

“நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்…” – ‘செல்ஃபி’ படம் உருவாக்கும் வில்லங்கம்!

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் செல்ஃபி’. இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும், இயக்குநர் சுப்ரமணிய சிவா, வித்யா பிரதீப், வாகை சந்திரசேகர், தங்கதுரை, குணநிதி, சங்கிலி முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இயக்குநர் மதிமாறன் படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். 

இந்தப் படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. டிரெயிலரில் பேசப்பட்டிருக்கும் சில வசனங்கள் தற்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

இந்த டிரெய்லரில் அரசியல்வாதியான சங்கிலி முருகன், “என்னப்பா நீட் நீட்டுன்னு போட்டு உயிரெடுக்கிறாங்க..?” என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் இயக்குநர் கௌதம் மேனன், “நீட்டை தடுக்க முடியாது. ஆனால் அதை வைத்து காசு பார்க்கலாம்…” என்று பேசுகிறார்.

ஏற்கெனவே சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம்’ படமும், ‘மாநாடு’ படமும் அரசியல் களத்தைச் சூடாக்கியிருக்கும் நேரத்தில் இந்த ‘செல்பி’ படமும் மீண்டும் ஒரு அரசியல் சர்ச்சையைக் கிளப்பப் போகிறது என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

Our Score