இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் நடிகர் விக்ரம்..!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் நடிகர் விக்ரம்..!

நடிகர் விக்ரமை தனது இயக்கத்தில் நடிக்க வைக்கவிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அவர் இயக்கி சமீபத்தில் ஓடிடியில் வெளியான ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்திற்கு தற்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற தலைப்பில் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சிதக். 

இதையடுத்து ஸ்டூடியோ கிரின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அதை உறுதி செய்யும்விதமாக இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘மகான்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Our Score