தயாரிப்பாளர்கள் ஜேம்ஸ் கார்த்திக், மற்றும் M.நியாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”.
இந்தப் படத்தில் ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக நடிக்க, இனியா , சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன், ஆஜித் (சூப்பர் சிங்கர்), க்ரிஷா குரூப், சென்ட்ராயன், ஆர்யன், அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள்: ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் இயக்குநர்: துரை கே.முருகன், ஒளிப்பதிவு – பாஸ்கர் ஆறுமுகம், இசை – அரவிந்த் ஜெரால்ட் & A.K.சசிதரன், பின்னணி இசை – ஜூபின், படத் தொகுப்பு – A.ரஞ்சித் குமார், கலை இயக்குநர்: S.அய்யப்பன், பாடலாசிரியர்கள் – சினேகன், கு.கார்த்திக், நடன இயக்குநர்: பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்கம் : டி.ரமேஷ்.
தன் வாழ்வில் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி, தயாரித்து இதில் நாயகனாக நடித்துள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். அறிமுக இயக்குநர் துரை K.முருகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப் பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இந்த ‘சீரன்’ உருவாகியுள்ளது.
நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளின் மையம்தான் இந்தப் படத்தின் கதை. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் மகன் மறுக்கப்பட்ட தன் தந்தையின் உரிமைக்காக போராடுவதுதான் கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான அம்சங்களுடன், அருமையான கருத்தை பேசும் சமூக அக்கறை கொண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர், காஞ்சிபுரம், செய்யாறு கிராமப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படக் குழுவினர் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகின்றனர்.
விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.













