தற்போது கார்த்தி – ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு பேமிலி டிராமா, திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இதில் ஜோதிகாவும், கார்த்தியும் அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். இவர்களின் அப்பா அம்மாவாக சத்யராஜூம், சீதாவும் நடித்துள்ளார்கள்.
கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை SDC பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிறுவனம் இதற்கு முன் ‘தொரட்டி’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’, ‘காவியன்’ ஆகிய படங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இயக்குநர் சேரனின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’, திரிஷாவின் ‘கர்ஜனை’ ஆகிய படங்களையும் வெளியிட இருக்கிறார்கள்.
‘தம்பி’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. டிசம்பர் 20-ம் தேதி ‘தம்பி’ திரைப்படத்தை வெளியிடவும் படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.