full screen background image

தமிழில் உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ‘ஜதுரா’..!

தமிழில் உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ‘ஜதுரா’..!

தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களை அதிகம் பேர் ரசிப்பதற்கான காரணம் அவைகளில் இருக்கும் விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள்தான். சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய படங்கள் உலக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்தத் தரத்தில் தற்போது இந்தியாவில் முதல்முறையாக முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய ‘ஜதுரா’ என்னும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த ‘ஜதுரா’ திரைப்படம், இந்தியாவில் முதல்முறையாக ரியல் டைம் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில்… விர்ச்சுவல் புரொடக்‌ஷன் முறையில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

தொழில் நுட்பத்திலும், தரத்திலும், திரைத்துறையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான விஷயமாகும். இது வருங்கால இந்திய சினிமாவின் முதல் முயற்சி.

இந்த ‘ஜதுரா’ படத்தை சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் முத்து கிருஷ்ணன் தயாரித்து வருகிறார். வி.எப்.எக்ஸ். இயக்குநராக பெமில் ரோஜர் பணியாற்றுகிறார். ரட்சகன் ஸ்ரீதர் இசையமைக்கிறார். மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஜெனிபர் படத் தொகுப்புப் பணியை மேற்கொள்கிறார். மைக்கேல் ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஆர்.ஜே.பார்த்திபன் இப்படத்தை இயக்குகிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருப்பவர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இவர்களின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தி இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Our Score