full screen background image

ரோடு திரில்லர் கதையில் உருவாகியிருக்கும் ‘சவாரி’ திரைப்படம்

ரோடு திரில்லர் கதையில் உருவாகியிருக்கும் ‘சவாரி’ திரைப்படம்

திரில்லர் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு என்றுமே ஆர்வம் இருக்கும். கொலைகாரன் யாரென்று தெரியாமல், இவனாக இருக்குமோ, அவனாக இருக்குமோ என்று  ரசிகர்களை யூகிக்க வைப்பதே இயக்குனர்களுக்கு பெரும் சவால். அத்தகைய  படங்களில் ஒன்றுதான் இந்த ‘சவாரி’ திரைப்படம்.

ரசிகர்களை நாற்காலியின் நுனியில்   உட்கார வைக்கும் தகுதி படைத்த படங்கள் என்றுமே வெற்றி பெரும் என்பது இந்தப் படத்துக்கு கிடைத்திருக்கும் கூடுதல் பலம்.

savaari-2

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் குகன் சென்னியப்பன்  படம் பற்றி கூறும்போது, “இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு எதிலும் வேகம்.. எல்லாவற்றிலும் வேகம் தேவையாய் இருக்கிறது. படம் பார்க்கும் ரசிகர்கள்கூட வேகமான, தடதடவென ஓடும் திரைக்கதை உள்ள படங்களைத்தான் விரும்புகின்றனர்.

இதை மனதில் கொண்டு ரோடு  த்ரில்லர்  என்கிற புதிய பாணியில் இந்தக் கதை எழுதப்பட்டு இருக்கிறது. புதிய தொழில் நுட்பக் கலைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்தப் படம், ரசிகர்களை நிச்சயம் நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும். எங்களை நம்பி வரலாம்..” என்றார்.

savaari-1

அடுத்த மாதம் வெளிவரவுள்ள இந்த ‘சவாரி’ படத்தின் உரிமையை கோடம்பாக்கத்திற்கு புதிய விநியோகஸ்தர் நிறுவனமாக அறிமுகமாகியிருக்கும் Entertainment brothers  நிறுவனத்தினர் வாங்கியுள்ளனர். 

விநியோகத் தொழிலின் முதல் வெளியீட்டாக இந்தப் படத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இணைய தளங்களில் ‘சவாரி’ படத்தின் போஸ்டர்களை கண்டதில் இருந்தே எங்களுக்கு அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாய் இருந்தது. எதேச்சையாக எங்களது நண்பர் ஒருவர் மூலம் இந்தப் படத்தின் பிரத்தியேக காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. படம் தொடங்கிய வினாடி முதல் பரபரப்பான இடைவேளைவரை எங்களுக்கு பிரமிப்புதான். இடைவேளையின்போதே எப்படியாவது இந்தப் படத்தை வாங்கிவிட வேண்டும் என்று எண்ணத்தில் இருந்தோம். படம் முடியும்போது எங்களது முடிவு தீர்மானமாய் மாறிப் போனது.

இந்தப் படத்தில் உள்ள வேகம், படத்தில் பணியாற்றிள்ள இளைஞர்களின் உத்வேகம் என்பதை அவர்களை சந்தித்த பிறகுதான் தெரிந்து கொண்டோம். இயக்குநர் குகன் சென்னியப்பனின் இயக்கமாக  இருக்கட்டும்.. ஒளிப்பதிவாளர்  செழியனின் நேர்த்தியான ஒளிப்பதிவாக இருக்கட்டும்.. மறைந்த படத் தொகுப்பாளர் கிஷோரின் படத் தொகுப்பும், ‘ஜில் ஜங் ஜக்’  படத்தின் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இன்னிசையும், படத்தின் ஏனைய தொழில்  நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின்  வெற்றிக்கு உறுதுணையாக  இருக்கப் போகிறார்கள் என்பது உறுதி. 

அடுத்த மாதம் வெளிவரவுள்ள ‘சவாரி’ ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் எங்களுக்கு மிக, மிக நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தினை எங்களது முதல் வெளியீடாக வெளியிடுவதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம்…” என்று குறிப்பிட்டள்ளது. 

படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

Our Score