full screen background image

“எதிரில் எம்.ஜி.ஆர். நிற்பதுபோல நினைத்து வசனத்தை பேசுங்கள்..” – சத்யராஜுக்கு ராஜமெளலி கொடுத்த டிப்ஸ்..!

“எதிரில் எம்.ஜி.ஆர். நிற்பதுபோல நினைத்து வசனத்தை பேசுங்கள்..” – சத்யராஜுக்கு ராஜமெளலி கொடுத்த டிப்ஸ்..!

‘பாகுபலி’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், ஒரு காட்சியில் தன்னை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். பெயரை இயக்குநர் ராஜமெளலி பயன்படுத்திய சுவாரஸ்யத்தை பகிர்ந்து கொண்டார்.

சத்யராஜ் பேசும்போது, “முதல்ல ஒரு விஷயம் சொல்லிடறேன். இந்த ‘பாகுபலி’ படம் டப்பிங் படம் அல்ல. நேரடித் தமிழ்ப் படம். ஒவ்வொரு ஷாட்டையும் தமிழுக்கு ஒரு முறையும், தெலுங்குக்கு ஒரு முறையும் என்றுதான் எடுத்தோம்.

அந்த ஷூட்டிங் ஸ்பாட்டை பார்த்தாலே ஏதோ அணை கட்டும் வேலை நடக்கிற மாதிரி இருக்கும். அவ்வளவு கூட்டம்.. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்தப் படத்தில் வேலை பார்த்தார்கள்.

‘பிரமாண்டத்தின் உச்சம்’ என்று இந்தப் படத்தை சொல்லலாம். நிறைய பேர் ஹாலிவுட் படங்களைத்தான் பிரமாண்டம்ன்னு சொல்வாங்க.. ஆனால் இனிமே ஹாலிவுட்காரங்களே இந்தப் படத்தை ‘பிரமாண்டம்ன்னா இதுதான்’னு சொல்லப் போறாங்க. அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வைச்சு வேலை வாங்கியிருக்கிறார் ராஜமெளலி.

இயக்குநர் ராஜமெளலி கடின உழைப்பாளி. ச்சும்மால்லாம் சொல்லலை. உண்மையாகவேதான்.. வேலை பார்த்துக்கிட்டிருப்பார். திடீர்ன்னு பார்த்தா வேறொரு இடத்துக்கு போயிக்கிட்டிருப்பார். செட்டில் ஒரு நிமிஷம்கூட ச்சும்மா இருக்க மாட்டார். நடந்துக்கிட்டே செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிட்டே போவார்..

இத்தனை ஆர்ட்டிஸ்ட்டுகள் படத்துல இருக்கோம். ஒவ்வொருத்தரையும் ஒவ்வொருவிதமாக டீல் செஞ்சார் டைரக்டர். இந்தப் படத்தில் கடவுளைப் பார்த்து நான் பேசுவது போல ஒரு காட்சி இருக்கிறது. நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். இது ராஜமௌலிக்கும் தெரியும். அதனால் இந்தக் காட்சியை படமாக்கும்போது என்னிடம், ‘ஸார்.. இப்போ உங்க முன்னாடி.. உங்களது தலைவர் எம்.ஜி.ஆர். திடீர்னு வந்தால் நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க..? பேசுவீங்க..? அப்படி நினைச்சுட்டு இப்போ பேசுங்க’ன்னு சொன்னார். மனுஷன் இப்படித்தான் எல்லார்கிட்டேயும் டெக்னிக்கா பேசியே வேலை வாங்கியிருக்கார்..” என்றார்.

பொது அறிவு மிகுந்த இயக்குநர்தான்..!

 

Our Score