சசிகுமார், சத்யராஜ் மற்றும் பரத் நடிக்கும் குடும்பத்துடன் காணக் கூடிய பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
இத்திரைப்படத்தை ஸம்பாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது, இந்தத் திரைப்படத்தை திரைத்துறையின் மூத்த தயாரிப்பாளர் தர்மராஜ் வேலுச்சாமி, விஜயகுமார் அவர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், பரத், மேகா ஷெட்டி, மாளவிகா, M.S. பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், சரவணன், ‘கஞ்சா’ கருப்பு, இந்துமதி, ஜோ மல்லூரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
எழுத்து மற்றும் இயக்கம் : M.குரு, தயாரிப்பாளர் : தர்மராஜ் வேலுச்சாமி, தயாரிப்பு : ஸம்பாரா என்டர்டெயின்மென்ட், இசை : NR ரகுநந்தன், ஒளிப்பதிவு : S.R. சதீஷ்குமார், பத்திரிக்கை தொடர்பு : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்.
நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் குடும்பத்துடன் காணக் கூடிய திரைப்படத்தின் படக்குழு பாரம்பரியமான பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பை தொடங்கியுள்ளது.
யதார்த்தமான மற்றும் உணர்ச்சிகரமான படங்களுக்கு பெயர் பெற்ற சசிகுமார், மூத்த நடிகர் சத்யராஜ் மற்றும் பரத் ஆகியோருடன் முக்கிய வேடங்களில் இத்திரைப்படத்தின் மூலம் இணைந்து மற்றொரு இதயத்தைத் தொடும் கதையை பெரிய திரைக்கு கொண்டு வர உள்ளார்.
இத்திரைப்படத்தின் மூலம் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். அனுபவமிக்க கலைஞர்களான M.S. பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், சரவணன், ‘கஞ்சா’ கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லோரி ஆகியோர் திறமையான மற்றும் சிறப்பான நடிப்பு ஆகியவை ஒருசேர உருவாகும் ஒரு தரமான திரைப்படத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும். M.குரு, இதற்கு முன்னர் இயக்குநர் இரா.சரவணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். அவர் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி, ஒரு வலுவான கதை சொல்லலுக்கு அடித்தளத்தை உருவாக்கியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் S.R. சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரபாண்டியன், கொடிவீரன் மற்றும் அயோத்தி ஆகிய படங்களில் தனது ஆத்மார்த்தமான பாடல்களுக்கு பெயர் பெற்ற என். ஆர். ரகுநந்தன் இசையமைக்க உள்ளார்.
பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரண்யம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவெளி இல்லாமல் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக் குழு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.