full screen background image

“எனக்கு ரஜினியும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒண்ணுதான்..!” – நடிகர் சத்யராஜின் சூடான பதில்..!

“எனக்கு ரஜினியும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒண்ணுதான்..!” – நடிகர் சத்யராஜின் சூடான பதில்..!

ஷங்கர் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் சுமன் வேடத்தில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் நடிகர் சத்யராஜ். “நான் நடிக்க வர்றேன். ஆனா என்னோட அடுத்த படத்துல ரஜினி வில்லனா நடிக்கணும். அவர் வருவாரா?” என்று சத்யராஜ் சுடச்சுட பதில் கேள்வி கேட்டதாக, அப்போது திரையுலகத்தில் பெரும் பேச்சு எழுந்தது.

ஆனாலும் அதனை மனதில் வைத்துக் கொள்ளாமல் ஷங்கர் தனது அடுத்த படமான ‘நண்பனில்’ நடிக்க அழைத்தபோது மறுக்காமல் ஒத்துக் கொண்டு நடித்தார் சத்யராஜ். இப்போது சமீபத்தில் வெளிவந்த ‘இசை’ படத்தில் இசைஞானி இளையராஜாவை ஞாபகப்படுத்தும் அளவுக்கு ஒரு வில்லத்தனமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இது குறித்து இன்றைய ‘குமுதம்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “அன்னிக்கு ‘சிவாஜி’ல நடிக்க ரஜினிக்கே மறுத்துட்டு, இன்னிக்கு ‘இசை’ படத்துல ஏன் நடிச்சீங்க..? என்ற கேள்விக்கு சத்யராஜ் வெளிப்படையாக பதில் சொல்லியிருக்கிறார்.

“நீங்க இப்ப ‘ரஜினிக்கே’ன்னு ஒரு ‘கே’ போட்டீங்க இல்ல. அது எனக்கு முக்கியமில்ல. நீங்க முதல்ல சொன்ன இடத்துக்கே கொஞ்சம் வருவோம். எவ்வளவு நாளைக்குத்தான் நாமளே நம்பள தரைமட்டமா நினைச்சுக்கிட்டிருக்கிறது..? என்ன கண்ணு.. என்ன நான் சொல்றது..? சத்யராஜ் என்ற நடிகனையே நான் கிரேட்டே நினைச்சுக்கிட்டிருக்கேன்.

நீங்க ‘கே’ போடுறதால ரஜினி பெரிய ஆளாகவும், எஸ்.ஜே.சூர்யா என்கிற நடிகன், சின்ன ஆளாகவும் பார்க்குற மாதிரி ஒரு தோற்றம் வருது. அப்படியில்ல. ரெண்டு பேருமே எனக்கு சமம்தான்.. படத்தில் என் கேரக்டர்தான் முக்கியம்.

‘சிவாஜி’ நல்ல படமா? ‘இசை’ நல்ல படமா என்பது வேற.. ‘சிவாஜி’யில வர்ற வில்லன் நல்ல வில்லனா..? ‘இசை’யில வர்ற வில்லன் நல்ல வில்லனா..? டவுட்டே வேண்டாம். ‘இசை’யில வர்ற வில்லன்தான் மிகச் சிறந்த வில்லன். அதுலதான் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

70 படம் வில்லன். 150 படம் ஹீரோ. எவ்வளவோ நடிச்சாச்சு. வேணும்கிற அளவுக்கு என்கிட்ட காசு இருக்கு. இனிமேலும் சம்பாதிச்சு என்ன பண்ணிட முடியும்..? மேல ரெண்டு வீடு வாங்கலாம். விதம்விதமா இன்னும் ரெண்டு கார் வாங்கலாம். எனக்கு இந்த ஆசையெல்லாம் இல்ல. இருக்குற காலத்துல நல்ல ரோல்ல நடிச்சிட்டுப் போவோம்..” என்று சொல்லியிருக்கிறார்.

கோயமுத்தூர்க்காரர்களுக்கு பேசுறதுக்கு சொல்லியா தரணும்..? ஆனாலும் ரஜினியும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒண்ணுதான்றது கொஞ்சம் ஓவர்தான்..!

Our Score