full screen background image

1000 சதுர அடியில் இலவச வீடு – சரத்குமார் அணியினரின் தேர்தல் அறிக்கை வெளியீடு..!

1000 சதுர அடியில் இலவச வீடு – சரத்குமார் அணியினரின் தேர்தல் அறிக்கை வெளியீடு..!

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் சரத்குமார் தலைமையிலான அணி தங்களது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.

IMG_4218

1. “தமிழக அரசு மூலமாக நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கி வந்த ஓய்வூதியம் 1000 ரூபாய் ஓய்வூதியத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா 1,500 ஆக உயர்த்தி இருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, மேலும் அந்தத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்.”

2. “அரசு ஓய்வூதியம் கிடைக்கப் பெறாத 60 வயதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க முதல்–அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்.”

3. “உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு (எல்.கே.ஜி. முதல் 5–ம் வகுப்பு வரை) ரூ.2,500 ஆக வழங்கி வரும் கல்வி உதவித் தொகையை ரூ.5,000 ஆகவும், (6 முதல் 10–ம் வகுப்பு வரை) ரூ.3,000 ஆக வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை ரூ.6,000 ஆகவும், மேல்நிலை படிப்புகளுக்கு ரூ.4,000 ஆக வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை ரூ.7,000 ஆகவும், பட்டப் படிப்புக்கு ரூ.7,500 ஆக வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை ரூ.10,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.”

4. “திருமண உதவித் தொகையாக தற்போது ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறோம். அந்தத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.”

5. “வெளி மாவட்டங்களில் நடைபெறும் படப்பிடிப்புகளில் அந்தந்த மாவட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.”

6. “60 வயது நிறைவடைந்த நாடக கலைஞர்கள் ஆயுட்கால உறுப்பினர்களாக மாற்றப்படுவார்கள்.”

7. “நடிகர் சங்கத்தில் ஆண்டு தோறும் நாடக விழா நடத்தப்படும்.”

8. “சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை கூட்டமைப்புடன் உள்ள ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சின்னத்திரையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.”

9. நடிகர் சங்க வரலாற்றை எடுத்து சொல்லும் வகையில் கலை சார்ந்த நவீன கட்டிடம் புதிய பொலிவுடன் கட்டப்படும். அந்த கட்டிடத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு 1,000 சதுர அடியில் இலவசமாக வீடு கட்டி தரப்படும்.”

இதுபோல் மேலும் பல சலுகைகளும் இந்தத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளெல்லாம் பிச்சை வாங்கணும் போலிருக்கே..? இதுக்கெல்லாம் பணம் எங்கேயிருந்து வரும்..? 

Our Score