full screen background image

சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ திரைப்படம்

சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ திரைப்படம்

பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், நடிகர் சசிகுமாரின் நடிப்பில் இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார்.

‘அயோத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

என்.ஆர்.ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் – துரைராஜ், படத் தொகுப்பு- சான் லோகேஷ் நடன இயக்கம் – ஷரீப், சண்டை இயக்கம் – பிரபு, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், நிர்வாகத் தயாரிப்பாளர்- தினேஷ் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் – செல்வம்-அஷ்ரப், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் சக்தி ரூபிணி-ஜெயராம்.  

படம் பற்றி இயக்குநர் மந்திரமூர்த்தி கூறுகையில், “எல்லோரும் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்தக் கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. கதையை கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். 

இந்த படத்திற்க்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது, மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 22-ம் தேதி தொடங்கவுள்ளது…” என்றார். 

Our Score