சசிகுமார் நடிக்கும் புதிய படம் ‘வெற்றிவேல்’

சசிகுமார் நடிக்கும் புதிய படம் ‘வெற்றிவேல்’

படத்திற்கு படம் புதுமையும், வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இயக்குநரும், நடிகருமான M. சசிகுமார்.

பாலாவின் இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடித்து  முடித்த கையோடு தனது புதிய படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார்  M. சசிகுமார்.

ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக ரவிந்திரன் தயாரிக்கும் இந்த புதிய படத்தை வசந்தமணி என்கிற புதிய இயக்குநர் இயக்கவுள்ளார்.

‘வெற்றிவேல்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நாயகனாக M. சசிகுமார் நடிக்க, பிரபு, தம்பி ராமையா, ரேணுகா, விஜி மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார். டி இமான் படத்திற்கு இசையமைக்க, S.R. கதிர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். 

தஞ்சாவூரில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.