full screen background image

‘சர்வம் தாள மயம்’ படம் ஜப்பானிய மொழியில் வெளியாகிறது

‘சர்வம் தாள மயம்’ படம் ஜப்பானிய மொழியில் வெளியாகிறது

நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில் இயக்குநர் ராஜீவ் மேனன் தயாரித்து, இயக்கியிருந்த ‘சர்வம் தாள மயம்’ படம் தற்போது ஜப்பானிய மொழியில் வெளியாகவுள்ளது.

2018-ம் ஆண்டு வெளியான இந்த ‘சர்வம் தாள மயம்’ திரைப்படம் இசைக் கலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், குமரவேல் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் தற்போது ஜப்பானிய மொழியில் வெளியாகவிருப்பதாக ஏ,ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஜப்பானிய மொழியில் இருக்கும் இந்தப் படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “#சர்வம்தாளமயம் ஜப்பானில் வெளியிடப்படும் @gvprakash @dirreajivmenon” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ‘சர்வம் தாள மயம்’ படம் ஜப்பானிய மொழியில் ‘Echo! Passionate Mridangam’! என்ற பெயரில் வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது.

Our Score