தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் S.லக்ஷ்மன்குமார் இந்த ‘சர்தார்’ படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் இரு வேடங்களில் கார்த்தி நடிக்கிறார். கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். மேலும் சிம்ரன், சங்கி ஃபாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – ஜார்ஜ் C.வில்லியம்ஸ், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – கதிர், எழுத்து – எம்.ஆர்.பொன்பார்த்திபன், ரோஜி, பிபின் ரகு, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா D, பாடல்கள் – யுகபாரதி, VFX – ஹரிஹர சுதன், நிர்வாக தயாரிப்பு- J.கிரிநாதன், தயாரிப்பு மேற்பார்வை-AP.பால்பாண்டி, புகைப்படங்கள் – ஜி.ஆனந்த்குமார், விளம்பர வடிவமைப்பு – சிவகுமார்.S, நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, மக்கள் தொடர்பு – ஜான்சன்.
இப்படத்தில் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. இரண்டு கார்த்திகளுக்கும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது.
இதுவரையிலும் ரசிகர்கள் திரையில் கண்டிராத அளவுக்கு, பிரம்மாண்டமான ஆக்சன் கட்சியாக இதை உருவாக்கி வருகிறார் பிரபல சண்டை இயக்குநரான திலீப் சுப்பராயன்.
கொடைக்கானல் காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இதன் படப்பிடிப்பு தற்போது மைசூரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா கார்த்தியின் ஆக்ஷன் காட்சிகள் அங்கே படமாகி வருகின்றன.