‘சரவணன் என்கிற சூர்யா’ திரைப்படத்தை ‘கில்டு’ அமைப்பின் மூலமாக முடக்கி வைத்து வெளியிடவிடாமல் தடை செய்த நடிகர் சூர்யாவின் நலம் விரும்பிகளின் விருப்பமே இப்போது நடந்தேறியுள்ளது.
அந்தப் படத்தின் பெயரை ‘போஸ்பாண்டி’ என்று மாற்றிவிட்டாராம் இயக்குநர். அதோடு இந்தப் படத்திற்கு யு சர்டிபிகேட்டும் கிடைத்துவிட்டது என்பதை பெருமையோடு சொல்கிறார்.
சின்ன பட்ஜெட் படம் என்பதால் பெரிய இடத்து ஆளுகளோடு மோதி தங்களது மண்டையை உடைத்துக் கொள்ள விரும்பாமல் பெயரை மாற்றி உடனடியாக படத்தை திரைக்குக் கொண்டு வர எண்ணியுள்ளனர்..
‘போஸ்பாண்டி’ என்ற பெயரை தனது அடுத்த படத்திற்கு தலைப்பாக வேண்டி பதிவு செய்து வைத்திருந்தார் இயக்குநர். இப்போது இந்த இக்கட்டான சூழலில் அந்தத் தலைப்பே அவருக்குக் கை கொடுத்திருக்கிறது..!
இந்தப் படம் மிக எதார்த்தமான நகைச்சுவை திரைபடமாம் இதில் ஒரு அழகான கருத்தும் சொல்லபட்டிருக்கிறதாம். படத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையே தெரிந்து கொள்ளாமல் வெறும் டைட்டில் ஒன்றுக்காகவே இந்தப் படத்தை எதிர்த்து ரிலீஸாகவிடாமல் தாமதம் செய்திருக்கிறார்கள் திரையுலக சங்கத்துக்காரர்கள்..!
கருத்துச் சுதந்திரம் என்பது அவரவர் மூக்கு நுனிவரைக்கும் என்பதை புரிந்து கொள்ளாதவர்களெல்லாம் சங்கங்களில் இருக்கும்போது இப்படித்தான் நடக்கும்..
இவர்களுக்கென்று ஒரு பாதிப்பு வரும்போதுதான் அடுத்தவர்களின் சுதந்திரம் என்னவென்று தெரியும்.. அதுவும் சீக்கிரமே இவர்களுக்குப் புரியும்..!









