சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளதாம்.
வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ரிலீஸ் செய்யும் அவசரத்தில் இருந்த ‘அஞ்சான்’ டீம், சென்னை சென்சார் ஆபீஸிற்கு முதலில் விண்ணப்பித்தார்கள். இங்கே இவர்களுக்கு முன்பேயே கியூவில் நின்ற கூட்டத்தைப் பார்த்து ‘இது வேலைக்கு ஆகாது’ என்று நினைத்து மும்பை சென்சார் போர்டுக்கு அப்ளை செய்து, ஒரே நாளில் படத்தை பார்க்க வைத்து சர்டிபிகேட் வாங்கிவிட்டார்கள்.
சூர்யா முதன்முறையாக சமந்தாவுடனும், லிங்குசாமி இயக்கத்திலும் நடித்துள்ளார். மும்பையை மையமாக வைத்து அதிரடி ஆக்சன் படமாக இது உருவாகி உள்ளதாம்.
“தணிக்கை அதிகாரிகள் படத்தை மிகவும் ரசித்து பார்த்தனர்… படம் நன்றாக இருப்பதாகச் சொல்லி ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். படம் நிச்சயம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும். புது டிரைலரும் தயாராகி வருகிறது. அடுத்த வாரம் புது டிரைலரை வெளியிட உள்ளோம்..” என்று டிவீட்டரில் கூறியிருக்கிறார் யு டிவி சி.இ.ஓ. தனஞ்செயன்.