இப்படத்தை ஃபார்ச்சூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நவீன் ராஜ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இதில், சந்தானம் ஜோடியாக, ‘தாராள பிரபு’ ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகினி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை – அர்ஜூன் ஜன்யா, ஒளிப்பதிவு – சுதாகர் ராஜ், கலை இயக்கம் – மோகன் பி.கேர், படத் தொகுப்பு – நாகூரா ராமசந்த்ரா, சண்டை பயிற்சி இயக்கம் – Dr.ரவி வர்மா, டேவிட் காஸ்டில்லோ, நடனப் பயிற்சி இயக்கம் – குலபுஷா, சந்தோஷ் சேகர், பத்திரிகை தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு – நவீன் ராஜ்.
இப்படத்தின் மூலமாக, பிரபலமான கன்னட இயக்குநரான பிரசாந்த் ராஜ் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இவர் கன்னடத்தில் ஹிட்டான ‘லவ் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் இயக்குநராக உள்ளார்.
இது ஒரு அக்மார்க் சந்தானம் படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் இதன் கதை அமைந்துள்ளது.
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக்குதான். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகனின் ஒவ்வொரு செயலிலும் கிக்காக செய்ய நினைப்பவன். வேறு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகியுடன், தொழில் முறை போட்டியில் கிக்காக எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன் ‘சந்தானம்’ பாணியில் இயக்குநர் உருவாக்கி இருக்கிறார்.
படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல்களுக்காக 12 விதமான செட்டுகள் அமைத்து அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார்கள்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. பின்னர் ஒரே கட்டமாக சென்னையிலும் தொடர்ந்து பாங்காங்கில் 15 நாட்களும் நடந்து முடிவடைந்துள்ளது.