படத்தில் நடனமாடியிருக்கும் சந்தானம்..!

படத்தில் நடனமாடியிருக்கும் சந்தானம்..!

பி.வி.பி சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் Hand made films தயாரிப்பில்  அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ‘ படத்தின் First look குறித்து,  ரசிகர்கள் மத்தியிலும் , திரை உலக பிரமுகர்கள் குறிப்பாக சந்தானத்தின் பரந்த கதாநாயகர்கள் நண்பர்கள்  வட்டத்துக்குள்ளும் இருந்து வரும் பாராட்டு அவரை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

தமிழ் திரை உலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து , அவர்களுக்கு நண்பனாகவே மாறி விட்ட சந்தானத்துக்கு இந்தப் பாராட்டு மிகவும் ஊக்கம் தந்திருக்கிறதாம் .

கதாநாயகனாக நடிப்பதற்கென தீவிர எடை குறிப்பில் ஈடுபட்டு இருபது வயது இளைஞன்போல் பொலிவுடன் இருக்கும் சந்தானம், இந்த படத்துக்காக பிரத்தியேக பயிற்சிகள்  மூலம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார்.

“அவரது ஈடுபாடு வியப்புக்குரியது. தான் கதாநாயகனாக நடிக்கும் படம் எந்த வகையிலும், ஜனரஞ்சகத்தில் ஒரு சதவிகிதம்கூட குறைய கூடாது என்ற எண்ணத்தில் எல்லா காட்சிகளிலும் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார்.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படமாகும்’ என்று கூறுகிறார் நகைசுவை நடிகரும், இந்த படத்தின் இயக்குனருமான ஸ்ரீநாத்.

இந்தப் படத்தில் சந்தானத்துக்கு இணையாக ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ‘ கதாநாயகியாக நடிப்பவர் ஆஷ்னா சாவேரி.

Technicians list

இசை –  சித்தார்த் விபின்

ஒளிப்பதிவு – சக்தி

படத் தொகுப்பு – சாய்

நடனம் – ராஜேஷ் கண்ணா

சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன்

கலை – ஏ.ஆர்.மோகன்

பாடல்கள் – மதன் கார்க்கி, நா.முத்துக்குமார்

இயக்கம் – ஸ்ரீநாத்

Our Score