full screen background image

சண்டியர் – திரை முன்னோட்டம்

சண்டியர் – திரை முன்னோட்டம்

எம்.கே.எஸ் பிலிம்ஸ் வழங்கும் உயிர்மெய் புரொடக்ஷன்ஸ் எஸ்.சங்கர்பிரசாத். கே.எஸ்.செந்தில்குமாருடன் இனணந்து தயாரிக்கும் படம் ‘சண்டியர்’.

இந்த படத்தில் ஜெகன் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. கதாநாயகியாக புதுமுகம் கயல் அறிமுகமாகிறார். மற்றும் வில்லனாக நாயகம், டி.ரவி, சிங்கம்புலி, சிந்து, முருகதாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    –      ஹரிபாஸ்கர்

இசை     –  யத்தீஷ் மகாதேவ் (இவர் சொன்னா புரியாது படத்திற்கு இசையமைத்தவர்.)

பாடல்கள்   –  சினேகன்

ஸ்டண்ட்   –  ஆக்சன் பிரகாஷ்

கலை   –  நித்யானந்த்

நடனம்  –   பப்பி, ரேகா

எடிட்டிங்     –  சரவணன்

தயாரிப்பு மேற்பார்வை   –  இளையராஜா

இணை தயாரிப்பு   –  கே.எஸ்.செந்தில்குமார்

தயாரிப்பு   –   எஸ்.சங்கர்பிரசாத்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சோழதேவன்.

இவர் இயக்குனர் ரமணா, விஜி ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….

“சண்டியர் என்றால் அடிதடி செய்பவன்..  கெட்டவன் என்ற நினைப்பு நம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் என் சண்டியர் அப்படியல்ல… இவன் வேற மாதிரி. இது தனி மனித ஒழுக்கம் பற்றிய கதை!

தலைமை பொறுப்புக்கு வருபவன் ரொம்பவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்கிற அறிய கருத்தை இதில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். நாயகம் என்பவர் இதில் வில்லனாக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு தஞ்சை மாவட்டத்தின் கிராமப்  பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. ஜனரஞ்சகமான படமாக சண்டியர் உருவாகியுள்ளது…” என்றார் இயக்குனர் சோழதேவன்.

Our Score