full screen background image

ரகுமான்-பரத் இணைந்து நடித்துள்ள அறிவியல் கலந்த திரில்லர் படம் ‘சமரா’

ரகுமான்-பரத் இணைந்து நடித்துள்ள அறிவியல் கலந்த திரில்லர் படம் ‘சமரா’
Peacock Art House என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் M.K.சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘சமரா’.
 
இத்திரைப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகியுள்ளது.
 
’எட்டு தோட்டாக்கள்’ படத்திற்கு பிறகு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் ரகுமான், இப்போது இந்த ‘சமாரா’ படத்திலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில்   நடித்துள்ளார்.
 
மேலும் பரத், டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த்,சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னி கிருஷ்ணா,  மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
ஹிந்தியில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’, ‘ஜோலி எல்எல்பி-2’, தமிழில் ‘விஸ்வரூபம்-2’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் மீர் சர்வார் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
ஒளிப்பதிவு – சினு சித்தார்த் , இசை – தீபக் வாரியர், பின்னணி இசை – கோபி சுந்தர், படத் தொகுப்பு – R.J.பாப்பன், சண்டை இயக்கம் – தினேஷ் காசி, நடன இயக்கம் – டேனி பவுல், பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு –  M.K. சுபாகரன், அனுஜ் வர்கீஸ். வசனம் – கதை, திரைக்கதை, இயக்கம் – சார்லஸ் ஜோசப்.
 
படம் பற்றி இயக்குநர் சார்லஸ் ஜோசப் பேசும்போது, “ஃபேமிலி செண்டிமெண்ட்டுடன் அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லர் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம். விறுவிறு ப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரகுமான், பரத் இணைந்து நடித்திருப்பது படத்திற்கு பெரிய பலம். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது…” என்றார்.
Our Score