full screen background image

‘காமெடி கிங்’ கவுண்டமணி நாயகனாக நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படம்

‘காமெடி கிங்’ கவுண்டமணி நாயகனாக நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படம்

‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’.

ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவி மரியா, வையாபுரி, முத்துக்காளை, ‘எதிர்நீச்சல்’ ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகாஶ்ரீ, டி.கே.ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது.

மேலும் நடிகர் சிங்கமுத்துவின் மகன், நாகேஷின் பேரன் மற்றும் மயில்சாமியின் மகன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.

இசை – சித்தார்த் விபின், ஒளிப்பதிவு – ஹெக்டர் ஸ்ரீதர், கலை இயக்கம் – மகேஷ் நம்பி, படத் தொகுப்பு – ராஜா சேதுபதி, இணை இயக்குநர்கள் – பி.ஜி.துரை, தீனா. மணிவண்ணன், தயாரிப்பு மேலாளர்: ராஜன், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், “நான் சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளேன். இயக்குநர்கள் மணிவாசகம், அர்ஜுன், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன்.

எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கியும் உள்ளேன்.

இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது அவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார்.

அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய வகையில் அரசியல் கலந்து முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்..” என்றார்.

Our Score