நடிகை சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னமும் முடியாத நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை இப்போதே அறிவித்துவிட்டார்கள்.
இந்த ‘யசோதா’ படத்தை Sridevi Movies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் சமந்தா உடன், வரலஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இசை – மணிசர்மா, வசனம் – புலகம் சின்னராயனா, Dr.செல்லா பாக்யலஷ்மி, பாடல்கள் – ராமஜோகையா சாஸ்திரி, கிரியேட்டிவ் டைரக்டர் – ஹெமம்பர் ஜஸ்தி, ஒளிப்பதிவு: M.சசிக்குமார், கலை இயக்கம் – அசோக், சண்டை இயக்கம் – வெங்கட், படத் தொகுப்பு – மார்தந்த் K.வெங்கடேஷ், லைன் புரொடியூசர் – வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பு – சிண்டா கோபாலகிருஷ்ணா ரெட்டி, இயக்கம் – ஹரி – ஹரீஷ், தயாரிப்பு – சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் பேசும்போது, “இந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் இந்திய அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்கக் கூடிய கதைக் களத்தை கொண்டுள்ளது.
நடிகை சமந்தா இந்த ‘யசோதா’ படத்தில் நடிப்பில் மட்டுமின்றி, சண்டைக் காட்சிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.
சமீபத்தில் ஒரு பிரம்மாண்டமான செட்டில் ஒரு பெரிய ஷெட்யூலை முடித்துவிட்டு, இன்று கொடைக்கானலுக்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காகச் செல்கிறோம். வரும் மே மாத இறுதியில்தான் இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும்.
இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிடுகிறோம்.” என்றார்.









