ஒரு பக்கம் நயன்தாராவை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. “கடத்திட்டுப் போறதா இருந்தா நயன்தாராவைத்தான் கடத்துவேன்…” என்று பகிரங்கமாக சொல்லும் அளவுக்கு ஜொள்ளிட்டுக் கிடக்கிறார். இன்னொரு பக்கம் “இதே விஜய் சேதுபதியை நான் கடத்துவேன்…” என்று சொல்லாமல் சொல்கிறார் நடிகை சமந்தா. அந்தளவுக்கு விஜய் சேதுபதி மீது சமந்தாவுக்கு கிரேஸாம்.. என்ன கொடுமை இது..?
சமீபத்தில் ஆனந்தவிகடனு’க்கு அளித்திருக்கும் பேட்டியில் விஜய் சேதுபதி பற்றி உருகி, உருகி சொல்லியிருக்கிறார் சமந்தா.
‘நான் விஜய் சேதுபதியோட பயங்கரமான ஃபேன். ‘பீட்சா’ ரிலீஸான சமயத்துல என்னோட பிரெண்ட்ஸ் என்னை வலுக்கட்டாயமா அந்தப் படத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க.. முதல் ஷாட். விஜய் சேதுபதி அறிமுக சீன். ரொம்ப சுமாரான ஓப்பனிங். ‘அச்சச்சோ… இவர்தான் ஹீரோவா… ரெண்டு மணி நேரம் காலி’னு நினைச்சேன். ஆனா, பாருங்க.. அடுத்தடுத்து ஒவ்வொரு ஷாட்லயும் என்னை ஆச்சர்யப்படுத்திட்டே இருந்தார். மனசு விட்டுச் சொல்றேனே… அடுத்த 15-வது நிமிஷம் அவரை நான் காதலிக்கவே ஆரம்பிச்சிட்டேன். அதுலயும் பேய் வீட்டுக்குள்ள பயந்து, தடுமாறி ஓடுறப்பலாம் சீனுக்கு சீன் சிக்ஸர் அடிச்சார் விஜய் சேதுபதி.
ஒவ்வொரு படத்துலயுமே இப்படி வெரைட்டி காமிச்சு அசத்திட்டே இருக்கார். அவரை இப்போ எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு… விஜய் சேதுபதிகூட நடிக்க எனக்கு ஆசை. ஒரு நல்ல ஸ்கிரிப்ட் வந்தா, அவர்கூட கண்டிப்பா நடிப்பேன். ஆனா, அதுல ஒரு சின்ன தயக்கம். அவர் படம்னா, ஹீரோ, ஹீரோயின்னு எல்லாமே அவர்தானே. யாருக்குமே எந்த வாய்ப்பையும் கொடுக்க மாட்டாரே…!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாராம்..
கடைசியாக அவரது கல்யாணம் பற்றி கேட்டபோது, “இப்போதைக்கு நான் ஒரு ரிலேஷன்ஷிப்ல இருக்கேன். ஆனா, அது யார், என்னன்னு பேச விரும்பலை. நேரம் வரும்போது நானே சொல்றேன். அதுவரை பேசாம அமைதியா இருக்கிறது எனக்கு பெட்டர்…!” என்று சொல்லியிருக்கிறார் சமந்தா.
இவருக்கென்ன ஈஸியா சொல்லிட்டாரு.. கிசுகிசு எழுதுற எங்களுக்குத்தான தெரியும் அந்தக் கஷ்டம்..!