full screen background image

“தியேட்டர் கட்டணங்களை குறைக்க வேண்டும்…” – நடிகர் விஷால் பேச்சு

“தியேட்டர் கட்டணங்களை குறைக்க வேண்டும்…” – நடிகர் விஷால் பேச்சு

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘சகுந்தலாவின் காதலன்.’

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பி.வி.பிரசாத், பிஸ்மயா, வாகை சந்திரசேகர் நடிக்கும் ‘வேலையில்லா விவசாயி’ படத்தின் துவக்க விழாவும்  இன்று  மாலை சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கருணாஸ் எம்.எல்.எ, தயாரிப்பாளர் சங்க தலைவரும்,  நடிகர் சங்க செயலாளருமான விஷால், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர்செல்வம், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி,  இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் இயக்குநர்கள் மனோஜ்குமார், ஆர்.வி. உதயகுமார், ரவி மரியா, பிரவீன்காந்த், சரவணன், சாய்ரமணி. நடிகர்கள் மன்சூர்அலிகான், ரமணா, உதயா, சௌந்தர்ராஜன், தயாரிப்பாளர்கள் ஜி.கே.ரெட்டி, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், பட்டியல் சேகர் எஸ்.எஸ்.துரைராஜ், சேதுராமன், செந்தில், திருவேங்கடம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

IMG_0286

இந்த விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, “இந்தப் படத்தின் இசை உரிமையை நான் வாங்கி இருக்கிறேன். நிறைய பேர் படத்தின் இசை உரிமையை வாங்குகிறார்கள். அனால் தயாரிப்பாளருக்கு முழுமையான தொகை வருவதில்லை, குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் இந்த விழாவின்வாயிலாக தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள். ஜி.எஸ்.டி. வரிக்கு மேல் இன்னொரு  வரியை போட்டு எங்களை கஷ்டப்படுத்த வேண்டாம்.

நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது. தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்க  வழிவகை செய்ய வேண்டும்.

IMG_0286

அதோடு தியேட்டர்கள் மூலமாக இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு உரிய பங்கு முறையாக கிடைப்பதில்லை. இதையும் சரி செய்ய வேண்டும். இதையெல்லாம் சொல்வதால் என்னை ‘வில்லன்’ என்று யார் சொன்னாலும் எனக்கு கவலை இல்லை.. தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்..” என்றார் விஷால்.

விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “கலைவாணர் அரங்கை புதுப்பித்து இங்கே சினிமா விருது வழங்கும் விழாவை நடத்த திட்டமிட்டார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அது நடக்கவில்லை. தமிழ்நாட்டை  சினிமாக்காரர்கள்தான் அதிகம் ஆண்டார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த நேரத்தில் சினிமாக்காரர்களை வரி  போட்டு வதைக்காதீர்கள்.

director r.v.udhayakumar

அதே போல் தியேட்டர் அதிபர்களும் பார்க்கிங் மற்றும் தின்பண்டங்களுக்கு நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

எம்ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் கருத்துள்ள நல்ல படங்கள் வந்தன. ஆனால் இப்போது ‘கொய்யால’ என பாடல் எழுதுகிறார்கள். பாடல்களில் ஆபாச வரிகள் இடம் பெறுகின்றன. பிற்காலத்தில் உங்களது பேரன் தனது நண்பர்களிடம் “கொய்யால’ என்ற அந்தப் பாடலை எழுதியவர் எங்கள் தாத்தாதான்…” என்று சொன்னால், அது உங்களுக்கு எவ்வளவு கேவலம்..?

‘வானத்தை போல மனம் படைத்த மன்னவனே’ என்ற பாடலை நான் எழுதினேன், ‘வானத்தை போல’ என்ற தலைப்பை தான் இயக்கிய படத்திற்கு வைத்தார் இயக்குநர் விக்ரமன். இப்போது வரும் பாடல்களை இதுபோல் படத்தின் தலைப்பாக வைக்க முடியுமா…?” என்றார் ஆவேசமாக.

Our Score