நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை.’
இந்தப் படத்தின் நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். நாயாகியாக சுபிக்சா நடித்துள்ளார். மற்றும் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பிஜு விஸ்வநாத், இசை – ராஜேஷ் அப்புகுட்டன் – ருத்ரா, பாடல்கள் – கட்டளை ஜெயா, எடிட்டிங். – சுதாகர், கலை இயக்கம் – மகேஷ் ஸ்ரீதர், நடனம் – ராபர்ட், ரேகா, ஸ்டண்ட் – விஜய், வசனம் மற்றும் இணை இயக்கம் – L.கணபதி, மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு மேற்பார்வை – அன்பு, தயாரிப்பு – நுபாயஸ் ரகுமான், THREE FACE Creations Release, கதை, திரைக்கதை, இயக்கம் – மகேஷ் பத்மநாபன்.
படம் பற்றி நாயகன் ருத்ரா பேசும்போது, “நாயகன் கதிர்(ருத்ரா) ஆடியோகிராபியில் கோல்ட் மெடலிஸ்ட், குடும்ப சூழ்நிலை காரணமாக தன் சொந்த ஊரில் நண்பனின் ஸ்டுடியோவில் வேலை பார்க்கிறான். சென்னையில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் ஸ்ருதி(சுபிக்ஷா) ஒரு ஆடியோ டாக்குமெண்டரிக்காக வனப் பகுதிக்கு வர அவளுக்கு உதவி செய்ய, கதிர் நியமிக்கப்படுகிறான். ஒலிப்பதிவுக்காக அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.
அவள், அவனது திறமையை அங்கீகரிக்க மறுக்கிறாள். ஆனால், அவனோ அதை பொருட்படுத்தாமல் அவளுக்கு ஏற்படும் இன்னல்களை சமாளித்து தன் வேலையில் கவனமாக இருந்து பணியை முடித்துக் கொடுக்கிறான். அந்த டாக்குமெண்ட்ரி பல விருதுகளை அவளுக்கு பெற்றுத் தர அதற்கு தகுதியானவன் கதிர் என்பதை உணர்கிறாள்.
தொடர்ந்து, BBC க்காக ஆடியோ டாக்குமெண்ட்ரி செய்ய வரும் டேவிட், ஸ்ருதியை நாட அவள் தன் பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கதிரை சாமர்த்தியமாக பேசி உதவிக்கு அழைக்கிறாள். அவளின் ஆசை வார்த்தைகளை உண்மை என்று நம்பும் கதிர் அவளிடம் மனதை பறிகொடுக்கிறான்.
ஸ்ருதி ஒரு சந்தர்ப்பவாதி. கதிரை வைத்து தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறாள் என்பதை உணர்ந்த டேவிட் கதிரை தனியாக சந்தித்து அவளைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்து இனியும் அவளிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறார்.
ஸ்ருதியின் சுய ரூபம் என்ன.. கதிரின் காதல் என்னவாயிற்று என்பதற்கு பதில் திரையில் கிடைக்கும்…” என்றார் நாயகன் ருத்ரா.
இந்த ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 6 விருதுகளை அள்ளியிருக்கிறது.
இத்திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தென்னிந்திய திரைப்படம், சிறந்த நடிகர் என இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
Colours International film Festival-லில் கலந்து கொண்டு சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் என்று இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
Silver Screen International Festival-லில் கலந்து கொண்டு சிறந்த நடிகர், சிறந்த வேற்று மொழி திரைப்படம் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
வரும் டிசம்பர் 24-ம் தேதி THREE FACE Creations பட நிறுவனம் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.









