V.T.V. புரொடெக்சன்ஸ் சார்பில் நடிகரும், தயாரிப்பாளருமான வி.டி.வி.கணேஷ் மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் படம் ‘சக்க போடு போடு ராஜா’..!
இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிடாத ஒரு கதாபாத்திரத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் வைபவி நடிக்கிறார்.
கதையில், காமெடியும் சேர்ந்து வருகிற ஒரு கதாபாத்திரத்தில் ‘சின்ன கலைவாணர்’ விவேக் நடிக்கிறார். மேலும் வி.டி.வி.கணேஷ், பவர் ஸ்டார், ரோபோ சங்கர், மயில்சாமி, சம்பத், சரத் லோயித்ஸவா, பாப்ரி கோஷ், சுரேகா வாணி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – அபினந்தன். படத்தொகுப்பு – அண்டோனி. கலை – உமேஸ்குமார். சண்டை பயிற்சி – கனல் கண்ணன். உடை அலங்காரம் – சிட்னி ஸ்லேடன். மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, தயாரிப்பு – வி.டி.வி.கணேஷ், இயக்கம் – ஜி.எல்.சேதுராமன்.
இதுவொரு ரொமோன்டிக், காமெடி, ஆக்சன் கலந்த படம். தனது அப்பாவின் பிஸினஸை கவனித்துக் கொண்டு எந்த கவலையும் இல்லாமல் ரொம்ப ஜாலியாக இருக்கும் கதாபாத்திரம் சந்தானத்துடையது. திரையில் சந்தானத்தை பார்க்கிற மக்களுக்கு, இவரை மாதிரியே நாமும் வாழணும் என்ற எண்ணம் வரும் அளவுக்கு அவரது கேரக்டர் ஸ்கெட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘சின்ன கலைவாணர்’ விவேக்கும், பவர் ஸ்டாரும் கூடவே இருப்பதால் படத்தில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது என்று உறுதியாக நம்பலாம். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய இயக்குநர் சேதுராமனே இந்தப் படத்தையும் இயக்குவதால், நிச்சயம் இதுவும் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கையில் படக் குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.