ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி, சூரி நடிப்பில் சென்ற வாரம் வெளியான ‘சகலகலாவல்லவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கிறது.
படத்தில் இடம் பெற்றுள்ள கலகலப்பான நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை மிகவும் விரும்பி அழைக்க.. ரிப்பீட் ஆடியன்ஸுடன் புதிய பார்வையாளர்களும் தினந்தோறும் அதிகரித்து வந்திருக்கிறார்கள்.
இயக்குநர் சுராஜின் சிறப்பான இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்திற்கு இந்த இரண்டாவது வாரத்திலும் கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பினையும், வரவேற்பையும் மனதில் வைத்து இப்போது கணிசமாக பல திரையரங்குகள் கூடுதலாக கிடைத்துள்ளனவாம்.
இதுவே இப்படத்தின் வெற்றிக்கு அச்சாரம் என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள் படக் குழுவினர்.
Our Score