full screen background image

சைவம் – திரை முன்னோட்டம்

சைவம் – திரை முன்னோட்டம்

இயக்குனர் விஜய் தமிழ் திரை உலகின் இயக்குனர்களில் தனி தன்மை உடையவர். விஜய் தன்னுடைய படங்களில் தன்னுடைய முந்தைய படத்தின் சாயல் இல்லாமல் இயக்குவதைத் தன்னுடைய பிரத்தியேக பாணியாக பின்பற்றுகிறார். முதல் படமான ‘கிரீடம்’ முதல் தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘சைவம்’வரையிலும் தன்னுடைய அடிப்படை பாணியான குடும்ப பின்னணியைத்தான் கதையில் கையாண்டு வருகிறார்.

“சைவம்’ முழுக்க, முழுக்க குடும்ப கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படமாகும். நமது குடும்ப வேர்களை பற்றிய கதை இது. நமது முன்னோர்களின் படங்கள் நம் வீட்டில் தொங்குவதன் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் கதை. நாசர் தன்னுடைய வாழ்நாள் சாதனையாக இந்த படத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அந்த குட்டி தேவதை சாரா, ‘தெய்வத் திருமகள்’ படத்தில் இருந்ததைவிட பல மடங்கு உயரத்தை நடிப்பால் இந்தப் படத்தில் தொட்டிருக்கிறார். லுதுப் என்கிற பாஷா என்கிற பெயரில் அறிமுகமாகும் நாசர்-கமீலா நாசர் தம்பதியரின் மகன் இந்த படத்தில் ரகளைபடுத்தியிருக்கிறார். அவருடைய உற்சாகம் திரையிலும் தெறிக்கும் என்று நம்புகிறேன்.

இசை அமைப்பாளர் ஜி.வீ.பிரகாஷ் மற்றும் ஒளிபதிவாளர் நீரவ் ஆகியோர் என்னுள் இணைந்த, என்னுடைய மன ஓட்டத்தை அறிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன். ஒரு படத்தின் இறுதிக்கட்ட பணிகளின்போதே, அடுத்தப் படம் பற்றி நாங்கள் விவாதிக்கத் துவங்கிவிடுவோம். அதுவே நாங்கள் தொடர்ந்து பணியாற்றும் ரகசியம்.

‘சைவம் ‘ இந்த கோடை காலத்தில் குளிர்ச்சியூட்டும் ஒரு இனிய தென்றலாக வலம் வரும். இந்தத் தலைப்பு எந்த ஒரு கலாச்சாரத்தை பற்றியதோ, வழக்கத்தை பற்றியதோ அல்ல. கதையின் மையக் கருத்தைப் பற்றியது” என்கிறார் இயக்குனர் விஜய்.

TECHNICIAN LIST

Production – Think Big Studios
Writer & Director – VIJAY
Cinematographer – NIRAV SHAH
Music – G.V. PRAKASH KUMAR
Art Director – SELVAKUMAR
Editor – ANTONY
Lyricist – Na. MUTHUKUMAR
Stunt Choreographer – MANOHAR VARMA
Choreography – CHINNI PRAKASH
Costume Designer – PALLAVI SINGH
Costumer – RAMANA
Make Up – RASHEED
Production Executive – MANI VARMA
Stills – RAMA SUBBU
Publicity Designs – RISING APPLE
Executive Producer – GANESH
CO – Producers – M. Rajashekhar & Dr. Menakha Satish Kumar.
Produced By – AL. ALAGAPPAN

ARTISTES

Naseer
Kausalya
Ravi
Rajalakshmi
Kalyani
Maiappan
Suresh
Lakshmanan Ganesh
Vidya
Vicky
Suchitra
Sara
Luthfudeen Basha
Rahil
Twaara
Ray Paul
George
Malathi
Vittal
Savithri

Our Score